For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ம.பி. உள்ளாட்சி தேர்தலில் வென்ற பெண்களின் கணவன்மார்களுக்கு பதவிப்பிரமாணம்.. சர்ச்சை

Google Oneindia Tamil News

போபால்: மத்திய பிரதேச உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பெண் வேட்பாளர்களுக்கு பதிலாக அவர்களின் கணவர்கள், உறவினர்கள் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இங்கு மொத்தம் 40 மாநகராட்சிகள் உள்ளன. 169 நகராட்சிகள் உள்ளன. இதற்கான உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த மாதம் நடந்து முடிந்தது.

இந்த தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் அதில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 40 மாநகராட்சிகளில் 24 மாநகராட்சிகளையும் 169 நகராட்சிகளில் 123 நகராட்சிகளையும் பாஜக தன்வசப்படுத்தியது.

குஜராத்துக்கு ரூ.608 கோடி.. தமிழ்நாட்டிற்கு வெறும் ரூ.33 கோடி.. மத்திய அரசின் விளையாட்டு நிதி! குஜராத்துக்கு ரூ.608 கோடி.. தமிழ்நாட்டிற்கு வெறும் ரூ.33 கோடி.. மத்திய அரசின் விளையாட்டு நிதி!

பாஜக சார்பில்

பாஜக சார்பில்

பாஜக சார்பில் 6,671 பேர் கவுன்சிலர்களாக வென்றுள்ளனர். இந்த தேர்தலில் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தலைவர்களாக தார் மற்றும் தாமோ மாவட்டங்களை சேர்ந்த 15 பெண்கள் போட்டியிட்டு வென்றனர். இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

15 பெண்கள்

15 பெண்கள்

அவ்வாறு எடுத்த போது தேர்தலில் வென்ற மேற்கண்ட 15 பெண்கள் பதவிப்பிரமாணம் எடுக்காமல் அவர்களுடைய கணவரோ அல்லது உறவினர்களோ பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெற்றி பெற்ற பெண்கள் கணவரையும் உறவினர்களையும் அனுப்பிவிட்டு வீட்டிலிருந்ததாக கூறப்படுகிறது.

மாவட்ட பஞ்சாயத்து செயலாளர்கள்

மாவட்ட பஞ்சாயத்து செயலாளர்கள்

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்ததும் தாமோ மற்றும் தார் மாவட்ட பஞ்சாயத்து செயலாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சன்டிரல் எனும் கிராமத்தில் நடந்த பதவிப்பிரமாணத்தின் போது லட்சுமி பாய், ராதா பாய், கிரண் பாய் ஆகியோர் பார்வையாளர்கள் போல் உட்கார்ந்திருந்தனர்.

5 பெண்களும் மேடைக்கு தூரத்தில்

5 பெண்களும் மேடைக்கு தூரத்தில்

மேலும் 5 பெண்களும் மேடைக்கு மிக தூரத்தில் இருந்தபடியே பதவிப்பிரமாணம் எடுத்து கொண்டனர். பெண்களுக்கு இடஒதுக்கீடு குறித்து பேசி வரும் நிலையில் வெற்றி பெற்ற பெண்களை பதவிப்பிரமாணம் செய்துக் கொள்ளவிடாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது போல் இந்த பெண்களுக்கு பதிலாக ஆண்களே பதவியில் அமருவார்கள் என்றே தெரிகிறது.

உள்ளூர் கட்சிக்காரர்

உள்ளூர் கட்சிக்காரர்

மேலும் இந்த பதவிப்பிரமாணத்தை உள்ளூர் கட்சிக்காரர் ஒருவர் எடுத்து நடத்தியதும் தெரியவந்தது. இந்த பதவிப்பிரமாணத்தில் கலந்து கொண்ட ஆண்கள், தங்கள் வீட்டு பெண்களை உள்ளாட்சி பணியாற்ற அனுப்ப தயாராக இல்லை. அவர்கள் குடும்ப கலாச்சாரத்தை கண்டு அஞ்சுகிறார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

புகார் இல்லை

புகார் இல்லை

வெற்றி பெற்றவர்கள் மட்டுமே உள்ளாட்சிகளில் பணியாற்ற முடியும். அவர்களுக்கு பதிலாக அவர்களுடைய உறவினர்களை பணியாற்ற அனுமதிக்க முடியாது. இது வரை எந்த பெண்ணுமே தனக்கு பதில் தனது கணவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார் என புகாரோ ஆட்சேபமோ தெரிவிக்கவில்லை. இந்த சம்பவம் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

English summary
In Madhya Pradesh, elected women's husbands take oath as panchs and sarpanchs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X