முந்திரி தோப்புக்குள் சாராயம் தயாரித்த பழங்குடியின மக்கள்.. தண்ணீர் என குடித்து மட்டையான யானைகள்!
புவனேஸ்வர்: முந்திரி தோப்புக்குள் பழங்குடியின மக்கள் வைத்திருந்த மக்குவா என்ற நாட்டு சாராயத்தை தண்ணீர் என நினைத்து மூக்கு முட்ட குடித்து விட்டு யானைக்கூட்டங்கள் மட்டையாகி கிடந்த சம்பவம் ஒடிசாவில் நடந்துள்ளது.
மதுப்பிரியர்கள் மூக்கு முட்ட குடித்து விட்டு ஆங்காங்கே சாலைகளின் ஓரத்தில் மட்டையாகி கிடப்பதை பல இடங்களில் பார்த்து இருப்போம்.
சில நேரங்களில் சாலைகளில் ரகளை செய்வது வாகனங்களை மறித்து வீராவேசம் காட்டுவது என மதுப்பிரியர்களின் அலப்பறை சமூக வலைத்தளங்களில் பரவி நமக்கு சிரிப்பை வரவழைப்பதாக இருக்கும்.

நாட்டு சாராயம்
மது போதையில் சாலைகளில் மதுப்பிரியர்கள் கிடப்பதெல்லாம் சர்வ சாதாரணம் ஆகி விட்டது. இதில் வியப்பதற்கு எதுவும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு நிலைமை இப்போது ஆகிவிட்டது. ஆனால், யானைக்கூட்டங்கள் பழங்குடியின மக்கள் வைத்திருந்த மக்குவா என்ற நாட்டு சாராயத்தை மூக்கு முட்ட குடித்து விட்டு மட்டையாகி கிடந்தது என்று சொன்னால் நம்ப முடிகிறதா... ஆம் இது உண்மையில் நடந்ததாக ஒடிசாவில் உள்ள பழங்குடியின மக்கள் சொல்கிறார்கள். இந்த நிகழ்வு பற்றிய விவரம் வருமாறு:-

முந்திரி தோப்புக்குள்
ஒடிசாவின் கியோன் ஜர் மாவட்டத்தில் உள்ள ஷிலிபடா வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பழங்குடியின மக்கள், இலுப்பை பூக்களை நீரில் ஊறவைத்து நாட்டு சாராயம் தயாரிக்கும் பழக்கம் கொண்டவர்களாம். அந்த வகையில் ஷிலிபடா வனப்பகுதியில் உள்ள முந்திரி தோப்புக்குள் சாராயத்தை ஊறவைத்து இருக்கின்றனர். மக்குவா என்று சொல்லப்படும் இந்த நாட்டு சாராயத்தை பெரிய பெரிய பானைகளில் ஊற வைத்து இருக்கின்றனர்.

சாராயத்தை குடித்த யானைகள்
நீரில் ஊற வைக்கப்பட்ட இந்த சாராயம் நன்கு பதம் ஆகி இருக்கும் என்று மறுநாள் காலையில் சென்ற கிராம மக்களுக்கு பெரும் அதிர்ச்சிதான் கிடைத்தது. ஏனென்றால் ஊற வைத்து இருந்த அனைத்து பானைகளும் சுக்கு நூறாக உடைந்து சிதறி கிடந்தது இத்தனை பானைகளை உடைத்து யார் சாராயத்தை குடித்து இருப்பார்கள் என்ற கோபத்துடன் அருகில் உள்ள பகுதிகளை தேடிப்பார்த்து உள்ளனர்.

தூங்கிக்கொண்டிருந்த யானைகள்
அப்போது அங்கு 24 யானைகளை கொண்ட ஒரு கூட்டம் குறட்டை விட்டு தூங்கி கொண்டு இருக்கிறது. இதனால், யானைகளை எழுப்ப கிராம மக்கள் முயற்சித்து இருக்கின்றனர். ஆனால், இதில் துளியும் பலன் கிடைக்கவில்லை. பிறகு வனத்துறையினரை அழைத்து வந்து யானைகளின் தூக்கத்தை கலைத்து இருக்கின்றனர். மெதுவாக எழும்பிய யானைகள் வனப்பகுதிக்குள் சென்று கொண்டிருக்கிறது. சாராயத்தை குடித்த மது மயக்கத்தில் யானைகள் இங்கே தூங்கிவிட்டதாக பழங்குடியின மக்கள் அடித்து சொல்கிறார்கள்.

போதையில் உறங்கியதா?
ஆனால், இந்த யானைகள் போதையில் தான் உறங்கின என்று உறுதியாக கூற முடியாது. வெகு தூரம் அலைந்துவிட்டு களைப்பில் கூட இப்படி தூங்கியிருக்கலாம் என்று வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. யானை குடித்ததாக சொல்லப்படும் நாட்டு சாரயம் பதம் ஆகவில்லை என்றும் சொல்லும் பழங்குடியின மக்கள் 9 ஆண் யானைகள் 6 பெண் யானைகள் 9 குட்டிகள் அங்கு இருந்ததாக தெரிவித்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications