ட்விஸ்ட்! கோவிலில் திருமணம் செய்துவைக்க மறுத்த பூஜாரி! தன்னைத்தானே மணக்கும் பெண் திடீர் மனமாற்றம்!
காந்திநகர்: பாஜகவில் இருந்து எதிர்ப்பு கிளம்பியதால் குஜராத் மாநிலம் வதோதராவில் சோலோகாமி திருமணத்தை கோவிலில் நடத்தி வைக்க ஒப்புக்கொண்ட பூஜாரி பின்வாங்கியுள்ளார். இதனால் தன்னைத்தானே திருமணம் செய்து கொள்ள உள்ள இளம்பெண் மனம்மாறி முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
இங்கிலாந்து, இத்தாலி உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் ‛சோலாகாமி' எனும் திருமணம் முறை நடைமுறையில் உள்ளது. இந்த திருமணத்துக்கு மணமகன், மணமகள் தேவையில்லை.
அதாவது தன்னைத்தானே திருமணம் செய்து கொள்வது தான் ‛சோலாகாமி' திருமணமாகும். இந்தியாவில் முதல் முறையாக இத்தகைய திருமணம் நடைபெற உள்ளது.

குஜராத் இளம்பெண்
குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்தவர் ஷாமா பிந்து (வயது 24). இவர் சோசியாலஜி பட்டப்படிப்பை முடித்து தற்போது தனியார் நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு பிரிவில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது பெற்றோர் இருவரும் இன்ஜினியர்கள். தந்தை தென்ஆப்பிரிக்காவில் உள்ள நிலையில் தாய் அகமதாபாத்தில் வசிக்கிறார். இந்நிலையில் ஷாமா பிந்து இவர் தான் ‛சோலோகாமி' திருமணத்தை செய்ய முடிவு செய்துள்ளார்.
அதன்படி மணமகன் இன்றி ஜூன் 11ல் திருமணம் செய்ய உள்ளார். பொதுவாக எதிர்பாலினம் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் இத்தகைய திருமணம் செய்கின்றனர். மேலும் சுயகாதல், சுய அங்கீகாரம் ஆகியவற்றை வெளியுலகிற்கு கூறும் வகையில் இதனை மேற்கொண்டு வருகின்றனர். ஷாமா பிந்துவை பொறுத்தமட்டில் அவர் வழக்கமான திருமணத்தில் நாட்டமின்றி உள்ளார்.

கோவிலில் திருமணம் செய்ய முடிவு
இருப்பினும் மணப்பெண் கோலத்தில் மணமேடையில் அமர அவர் விரும்புகிறார். இதை நிறைவேற்றி கொள்ளதான் அவர் ‛சோலோகாமி' திருமணத்தை கையில் எடுத்துள்ளார். திருமணத்துக்கு பிறகு அவர் கோவாவுக்கு ஹனிமூன் செல்லவும் திட்டமிட்டுள்ளார். இந்த திருமணத்தை அவர் ஹசாரியில் உள்ள ஹரிஹரேஷ்வர் மகாதேவ் கோவிலில் வெகுவிமரிசையாக நடத்த உள்ளார். இந்நிலையில் வழக்கமான இந்து முறைப்படியும் அவரது குடும்ப பாரம்ரிய முறைப்படியும் இந்த திருமணத்தை நடத்த முடிவு செய்தார். பூஜாரி மந்திரம் கூற ஷாமா பிந்து தன்னைத்தானே திருமணம் செய்து கொள்ள உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் துவங்கியது.

பாஜக கடும் எதிர்ப்பு
இந்நிலையில் தான் திருமணத்தை கோவிலில் நடத்த பாஜக சார்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுபற்றி வதோதரா பாஜக நகர துணை தலைவர் சுனிதா சுக்லா கூறியதாவது: ‛‛சோலோகாமி திருமணத்துக்கான இடத்தேர்வை எதிர்க்கிறோம். இந்த திருமணத்தை கோவிலில் நடத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ஏனென்றால் இது இந்து மதத்துக்கு எதிரானது. இத்தகைய திருமணத்தால் இந்துக்களின் மக்கள்தொகை குறையும். இந்த திருமண முடிவை எடுத்துள்ள பெண் மனநலம் சரியில்லாதவர்'' என தெரிவித்துள்ளார். மேலும் சிலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது சட்டவிரோதம் இல்லை
இந்நிலையில் ஷாமா பிந்து தனது முடிவை மாற்றியுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: ‛‛நான் மற்ற பெண்களை போலவே மணமேடையில் மணப்பெண்ணாக இருக்க விரும்புகிறேன். இதனால் என்னை நானே திருமணம் செய்து கொள்கிறேன். இதற்கு சட்டப்பூர்வ அனுமதி இல்லாமல் இருக்கலாம். ஆனால் இது சட்டவிரோதம் அல்ல. இதனால் திருமணத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். தேவைப்படும் பட்சத்தில் வழக்கறிஞர்களிடம் இதுபற்றி ஆலோசிப்பேன்.

பூஜாரி மறுப்பு
இந்த திருமண அறிவிப்புக்கு பிறகு என்னை அதிகளவிலான மக்கள் தேடி வருகின்றனர். இதனால் பக்கத்து வீட்டுக்காரர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். கோவிலில் திருமணம் செய்ய எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. நான் யாருடைய மதத்தையும், நம்பிக்கையையும் புண்படுத்த விரும்பவில்லை. எனக்கு முதலில் திருமணம் செய்து வைக்க ஒப்புக்கொண்ட பூஜாரி இப்போது மறுத்துவிட்டார். இதனால் திருமணத்தை வேறு இடத்தில் நடத்த திட்டமிட்டுள்ளேன். மேலும் மந்திரங்களை டேப் ஒன்றில் ரெக்கார்ட் செய்து அதனை ஒலிக்க செய்து என்னை நானே திருமணம் செய்ய உள்ளேன்'' என்றார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications