For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காலுக்கு கீழே.. அரக்கர் உருவத்தில் காந்தி.. மேற்கு வங்க துர்கா பூஜையில் திடீர் சர்ச்சை.. பின்னணி!

Google Oneindia Tamil News

கொல்கத்தா: வட மாநிலங்களில் துர்கா பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் மேற்குவங்கத்தில் வலதுசாரி அமைப்பினர் கொண்டாடிய துர்கா பூஜை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்து கடவுள்களில் மிகவும் துடியான தெய்வம் துர்கை அம்மன். காலுக்கு கீழ் அரக்கனை வதம் செய்தவாறு கையில் ஆயுதங்களோடு பக்தர்களுக்கு அருள்பாளித்துக்கொண்டிருப்பார் இந்த அம்மன்.

இவ்வாறு இருக்கையில் மேற்குவங்கத்தில் வலதுசாரி இந்துத்துவ அமைப்பினரால் வடிவமைக்கப்பட்டுள்ள துர்கை அம்மன் சிலையின் கீழ் அரக்கனுக்கு பதில் காந்தி போன்ற பொம்மையை செய்து வைத்துள்ளனர்.

 காந்தி ஜெயந்தி - புதுச்சேரியில் காந்தி திருவுருவச் சிலைக்கு ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி மரியாதை! காந்தி ஜெயந்தி - புதுச்சேரியில் காந்தி திருவுருவச் சிலைக்கு ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி மரியாதை!

பாஜக ஆதரவுடன்...

பாஜக ஆதரவுடன்...

இந்தியாவில் தீவிர இந்துத்துவ கருத்துகளோடு வலதுசாரி அமைப்புகள் பல இயங்கி வருகின்றன. இந்த அமைப்புகளின் செயல்பாடுகள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு வந்தாலும், இது போன்ற நடவடிக்கைகள் குறைந்தபாடில்லை. இந்த அமைப்புகளுக்கு பாஜக ஆதரவு அளிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் அவ்வப்போது மேலெழுந்துள்ளன. இவ்வாறு இருக்கையில் தற்போது மற்றொரு சம்பவம் நாடு முழுவதும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.

மற்றொரு சம்பவம்

மற்றொரு சம்பவம்

அதாவது, மேலே குறிப்பிடத்தைப்போல துர்கை அம்மனின் கீழ் இடம் பெற்றிருக்கும் அரக்கனின் உருவத்திற்கு பதில் காந்தியை ஒத்துள்ள உருவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. ஏற்கெனவே பாஜகவின் எம்பி பிரக்யா தாகூர் காந்தியின் உருவ படத்தை துப்பாக்கி கொண்டு சுட்ட சம்பவம் பாஜகவுக்கு பெரும் தலைவலியை உருவாக்கியது. இதனையடுத்து தற்போது இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

காந்தியா?

காந்தியா?

காந்தி சிலை மட்டுமல்லாது, இந்த சிலை வைக்கப்பட்டுள்ள கொட்டகையின் மேல் கட்டப்பட்டுள்ள பேனரில் ரவிந்தரநாத் தாகூர் ஆகியோரின் படங்களுடன் கோட்சேவின் படமும் இடம்பெற்றுள்ளன. இது குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான அகில பாரத இந்து மகாசபையின் நிர்வாகி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், "நீங்கள் கூறுவது உண்மைதான். இது காந்தியை போலதான் இருக்கிறது. ஒருவர் வழுக்கை தலையுடன் பெரிய கண்ணாடியை அணிந்திருந்தால் அவர் காந்தி என்று அர்த்தமா?

கண்டனம்

கண்டனம்


இங்கே எங்காவது இவர்தான் காந்தி என்று எழுதியிருக்கிறதா?" என்றும் கேள்வியெழுப்பினார். இந்த சம்வபவத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மட்டுமல்லாது பாஜக தரப்பிலும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காவல்துறை சிலையை அப்புறப்படுத்த வலியுறுத்தினர். பின்னர் அகில பாரத இந்து மகாசபையினர் சர்ச்சைக்குரிய சிலையை எடுத்துவிட்டு வேறு சிலை வைத்து வழிபாட்டை தொடர்ந்துள்ளனர்.

English summary
While Durga Puja is being celebrated well in northern states, Durga Puja celebrated by right-wing organizations in West Bengal has caused a great controversy. Goddess Durga is the most powerful goddess among the Hindu Gods. This goddess is blessing the devotees with weapons in her hands as if she has killed the demon under her feet. In this way, right-wing Hindu organizations in West Bengal have replaced the demon with a doll like Gandhi under the statue of Goddess Durga.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X