For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர்கள்... 111 வது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: நாடாளுமன்றத்தில் அதிக பெண் உறுப்பினர்களை கொண்ட நாடுகள் வரிசையில் இந்தியா 111-வது இடத்தில் உள்ளது. சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்ட இந்த சூழலில் இந்த அதிர்ச்சி தரும் ஆய்வு வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த "தி இன்டர்-பார்லிமென்ட் யூனியன்" என்ற அமைப்பு சார்பில் உலக நாடுகளின் நாடாளுமன்றங் களில் அதிக பெண் உறுப்பினர் கள் கொண்ட நாடுகள் குறித்து ஆண்டுதோறும் ஆய்வு நடத்தப்பட்டு அறிக்கை வெளியிடப் படுகிறது.

நடப்பாண்டு அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் 189 நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டு உள்ளன.

ருவாண்டா முதலிடம்

இந்தப் பட்டியலில் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள ருவாண்டா முதலிடத்தில் உள்ளது என்பதுதான் ஆச்சரியம் தரும் செய்தி. அந்த நாட்டின் நாடாளு மன்ற உறுப்பினர்களில் 60 சதவீதம் பேர் பெண்கள். அதைத் தொடர்ந்து அன்டோரா, கியூபா, சுவீடன், தென்ஆப்பிரிக்கா ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித் துள்ளன.

இந்திய நாடாளுமன்றம்

இந்த பட்டியலில் இந்தியா 111-வது இடத்தில் உள்ளது. இந்திய லோக்சபாவில் 62 பெண் உறுப்பினர்கள் உள்ள னர். அவையின் மொத்த பலமான 545 உறுப்பினர்களுடன் ஒப்பிடும் போது இது வெறும் 11.4 சதவீதம் மட்டுமே.

ராஜ்யசபாவில் 28 பெண்கள்

இதேபோல் இந்திய மாநிலங் களவையில் 28 பெண் உறுப்பி னர்கள் உள்ளனர். அந்த அவை யின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கையான 245-ல் இது வெறும் 11.4 சதவீதம் மட்டுமே.

அமெரிக்கா, கனடா

அமெரிக்கா 83-வது இடத்திலும் கனடா 54-வது இடத்திலும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

நேபாளத்தில் அதிகம்

தெற்கு ஆசிய நாடாளு மன்றங்களில் அதிக பெண் உறுப்பினர்களை கொண்ட நாடாக நேபாளம் உருவெடுத்துள்ளது. அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் 30 சதவீதம் பேர் பெண்கள்.

பெண் உறுப்பினர் இல்லை

மைக்ரோனேசியா, பலாலு, கத்தார், வானாட்டு உள்ளிட்ட நாடுகளின் நாடாளுமன்றங்களில் பெண் உறுப்பினர்களே இல்லை. அந்த நாடுகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளன.

English summary
India is placed at 111 position out of 189 countries in a list prepared by an international organisation that ranks nations on the number of women representatives in parliament.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X