For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாஸ் காட்டிய இந்தியா.. வெலவெலத்த சீனா! வடகொரியா மாடலா? 5,000 கிமீ பாயும் அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி

Google Oneindia Tamil News

புவனேஸ்வர்: கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து எதிரி நாடுகளை தாக்கி அழிக்கும் அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் அக்னி 5 ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்து சாதித்து இருக்கிறது இந்தியா.

கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கி அழிக்கும் அக்னி 5 ஏவுகணை இந்தியாயின் ராணுவ ஆராய்ச்சி அமைப்பான டிஆர்டிஓ மற்றும் பாரத் டைனமிக்ஸ் லிமிட்டேட் நிறுவனங்களால் இணைந்து தயாரிக்கப்பட்டது.

இதன் தயாரிப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து ஒடிசா மாநிலம் பாலசோர் கடற்கரை ஒட்டி அமைந்து இருக்கும் அப்துல் கலாம் சோதனையில் இந்த ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டது.

வெற்றிகரமாக சோதனை

வெற்றிகரமாக சோதனை

இந்த ஏவுகணை 5,500 கி.மீ தாண்டி சென்று இலக்கை தாக்கி அழித்ததை தொடர்ந்து சோதனை வெற்றிகரமாக முடிந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 9 ஆம் தேதி இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநில எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய சீன ராணுவ வீரர்களை இந்திய ராணுவம் விரட்டியடித்த நிலையில் இந்த ஏவுகணை சோதனையை சீன ராணுவம் செய்து உள்ளது.

 வேகமும் இலக்கும்

வேகமும் இலக்கும்

கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து எதிரிகளின் இலக்கை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட இந்த அக்னி 5 ஏவுகணை குறைந்தபட்சம் 5,000 கிலோ மீட்டர் பாய்ந்து செல்லும் திறன் கொண்டது. இந்த ஏவுகணையில் இலக்கிற்குள், ஆசிய கண்டத்தின் நாடுகளான ரஷியா, ஜப்பான், இந்தோனேசியா, உக்ரைன், ஐரோப்பிய கண்டத்தின் சில நாடுகளை கொண்டு வர முடியும்.

சீனா, பாகிஸ்தான்

சீனா, பாகிஸ்தான்

உலகின் பாதி நாடுகளை இந்த அக்னி 5 ஏவுகணையால் குறிவைக்க முடியும் என தெரிகிறது. குறிப்பாக இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவில் உள்ள இலக்குகளை இது எளிதில் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. குறிப்பாக சீனா தலைநகர் பெய்ஜிங், ஷாங்காய், ஹாங்காங், குவாங்சோ ஆகியவற்றை இந்த ஏவுகணையால் தாக்க முடியும்.

அணு ஆயுதங்கள்

அணு ஆயுதங்கள்

அக்னி 5 ஏவுகணையை எதிரி நாடுகளை அச்சுறுத்த முக்கிய காரணம், அது அணு ஆயதத்தை தாங்கி செல்லும் திறன் கொண்டது என்பதால்தான். 1,500 கிலோ அணு ஆயுதங்களை இந்த அக்னி 5 ஏவுகணை சுமந்து செல்லும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. லாரி மூலமாக எந்த இடத்திற்கும் இந்த ஏவுகணையை எளிதில் கொண்டு சென்று தாக்குதலை நடத்த முடியும் என்றும், மொபைல் லாஞ்சரில் இருந்தே இதனை எளிதில் இயக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஒலியை விட 5 மடங்கு வேகம்

ஒலியை விட 5 மடங்கு வேகம்

ஒரே நேரத்தில் பல இலக்குகளை குறிவைத்து தாக்கி அழிக்கும் திறன் படைத்த இந்த ஏவுகணையின் எடை 50,000 கிலோவாகும். இந்த ஏவுகணை சுற்றளவு 6.7 அடியாகவும், நீளம் 57.4 அடியாகவும் இருக்கிறது. ஒலியின் வேகத்தை காட்டிலும் 24 மடங்கு அதிக வேகத்தில் இலக்கை நோக்கி பாய்ந்து செல்லும் திறன் கொண்டது இந்த அக்னி 5. அதாவது, மணிக்கு 29,401 கிலோ வேகத்தில் இது செல்லும்.

வட கொரியா மாடல்

வட கொரியா மாடல்

இதுபோன்ற சக்திவாய்ந்த ஏவுகணை அமெரிக்கா, சீனா, ரஷியா, வட கொரியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளிடம் மட்டுமே இருந்த நிலையில் இந்தியாவும் அதில் இணைந்து உள்ளது. பொதுவாக தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் தங்களிடம் சீண்டினால் அவர்களை அச்சுறுத்தும் வகையில் வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தும். இந்த நிலையில் இந்தியா நடத்தி இருக்கும் இந்த அக்னி 5 சோதனை சீனாவுக்கு நிச்சயம் நடுக்கம் தரும் என கூறப்படுகிறது.

English summary
India has successfully tested the Agni 5 missile which carries nuclear weapons that can travel from continent to continent and destroy enemy countries.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X