100% உள்நாட்டு தயாரிப்பு.. ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கும் போர்க்கப்பல் கடற்படையிடம் ஒப்படைப்பு
கொச்சி: இந்தியாவில் முதல் முறையாக ரூ.20 ஆயிரம் கோடியில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விக்ராந்த் விமானம் தாங்கும் போர்க்கப்பல் நேற்று இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்தியா சார்பில் ஐஎன்எஸ் விக்ராந்த், ஐஎன்எஸ் விராட் என 2 விமானம் தாங்கி கப்பல்களை இந்தியா பயன்படுத்தி வந்தது. ஆங்கிலேயர்கள் வடிவமைத்த இந்த இரு கப்பல்கள் தான் சுதந்திர இந்தியாவிலும் பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் இந்தியா சார்பில் விமானம் தாங்கிய போர்க்கப்பல் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான நடவடிக்கையை மத்திய அரசு முன்னெடுத்தது.

கப்பல் கட்டும் பணி முடிவு
மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தில் கப்பல் கட்டும் பணி வழங்கப்பட்டது. அதன்படி உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கும் போர்க்கப்பல் தயாரித்து முடிக்கப்பட்டது. இந்த கப்பல் கட்டும் பணியானது 3 கட்டங்களாக நடைபெற்று முழுவதுமாக முடிக்கப்பட்டுள்ளது.

இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு
இந்தியா 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில் இந்த கப்பல் நேற்று இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த கப்பல் கட்டும் பணி கடந்த 2009ல் துவங்கப்பட்ட நிலையில் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. தற்போது 13 ஆண்டுகள் கழித்து பணி முற்றிலுமாக முடிக்கப்பட்டு இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது இந்திய கடற்படையில் விரைவில் இணைக்கப்பட உள்ளது. அநேகமாக இந்தியாவின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக கடற்படையுடன் இணைக்கப்பட வாய்ப்புள்ளது.

ரூ.20 ஆயிரம் கோடி
ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கிய போர்க்கப்பலானது ரூ.20 ஆயிரம் கோடி செலவில் முழுவதும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. கப்பல் கட்ட தேவையான பொருட்களில் 75 சதவீதம் இந்தியாவில் இருந்தே பெறப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள BEL, BHEL, GRSE, Keltron, Kirloskar, Larsen & Toubro, Wartsila India உள்ளிட்ட நிறுவனங்கள் கப்பல் தயாரிப்புக்கான உபகரணங்களை வழங்கின. மத்திய ராணுவத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள டிஆர்டிஒ மற்றும் ஸ்டீல் ஆணைய கூட்டாண்மை சார்பில் கப்பலுக்கான இரும்புகள் வழங்கப்பட்டது. இதன்மூலம் உள்நாட்டு உற்பத்திக்கான ‛ஆத்மநிர்பர் பாரத்' மற்றும் 'மேக் இன் இந்தியா' திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

வசதிகள் என்னென்ன?
விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பலானது மொத்தம் 45,000 டன் எடையோடு 2,300 அறைகளுடன், 1700 பேர் பயணிக்க கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ள்ளது. இந்த கப்பல் 860 அடி நீளமும், 203 அடி அகலமும், 19 அடி உயரமும் கொண்டத. அதிகபட்சமாக மணிக்க 53 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. அதோடு எம்ஐஜி -29கே (MIG-29K)போர் விமானம், காமோவ்-31 (Kamov-31), எம்எச்-60ஆர்(MH-60R) மல்டி-ரோல் ஹெலிகாப்டர்கள், மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்கள் (ALH)மற்றும் இலகுரக போர் விமானங்கள் (LCA) ஆகியவற்றை உள்ளடக்கிய 30 விமானங்களைக் கொண்ட விமானப் பிரிவை இயக்கும் திறன் கொண்டதாக இருக்கும். மேலும் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில், நமது நாட்டின் பாதுகாப்பு நிலையை இந்த விமானம் தாங்கி போர்க்கப்பல் மேம்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications