For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு தூக்கு- இந்திய தூதரகம் மேல்முறையீடு செய்யும்: மத்திய அரசு

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: இலங்கையில் 5 தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் மேல்முறையீடு செய்யும் என்று வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன் தெரிவித்துள்ளார்.

2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28-ந் தேதி மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வர மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. பின்னர் 5 பேரும் போதைப் பொருள் கடத்தினார்கள் என்று குற்றம்சுமத்தி சிறையில் அடைத்தது.

இந்த வழக்கில் இன்று கொழும்பு உயர்நீதிமன்றம் 5 தமிழக மீனவர்களுக்கும் தூக்கு தண்டனை விதித்தது. இது தமிழகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களை விடுதலை செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இது தொடர்பாக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். இந்த தூக்கு தண்டனையை எதிர்த்து கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் மேல்முறையீடு செய்யும் என்றார்.

English summary
Ministry of External Affairs (MEA) spokesperson Syed Akbaruddin said that, India's High Commission in Colombo will through lawyer appeal to higher Court against judgement by lower Court on 5 Indian fishermen.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X