For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: பாஜக-133; சிவசேனா-57; காங்.-30.. இந்தியா டுடே கருத்து கணிப்பு

By Mathi
Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 133 இடங்களைக் கைப்பற்றும் என்றும் 15 ஆண்டுகால ஆளும் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியை சந்திக்கும் என்று இந்தியா டுடே கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

288 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு வரும் 15-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையில் சிறு கட்சிகள் ஒரு கூட்டணியாகவும் சிவசேனா, மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை தனித்தும் போட்டியிடுகின்றன.

2009ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 82, தேசியவாத காங்கிரஸ் 62 இடங்களைப் பெற்று கூட்டணி ஆட்சி அமைத்தது. அத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 46, சிவசேனா 45 இடங்களைக் கைப்பற்றியிருந்தது.

தற்போதைய தேர்தலில் 25 ஆண்டுகால பாஜக- சிவசேனா கூட்டணியும் 15 ஆண்டுகால தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணியும் முறிவடைந்து போயுள்ளதன. இந்த நிலையில் இந்தியா டுடே-சிசிரோ இணைந்து நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

கணிப்பு காலம்

கணிப்பு காலம்

கூட்டணிகள் எல்லாம் உடைந்த பின்னர் செப்டம்பர் 30-ந் தேதி முதல் அக்டோபர் 4-ந் தேதி வரை இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

பாஜக 133

பாஜக 133

இதில் பாரதிய ஜனதா கட்சி 133 இடங்களைக் கைப்பற்றக் கூடும் என்கிறது கருத்து கணிப்பு. அதாவது 125 முதல் 144 இடங்கள் வரை பாஜக கைப்பற்றுவதற்கு சாத்தியம் உள்ளதாம். கடந்த தேர்தலை விட பாஜகவுக்கு 16% வாக்குகள் கூடுதலாக கிடைக்கும் என்கிறது இக்கணிப்பு.

சிவசேனா 57

சிவசேனா 57

எப்படியும் ஆட்சியைக் கைப்பற்றி முதல்வராகிவிடுவோம் என்று கனவு கண்டு கொண்டிருக்கும் சிவசேனாவுக்கு 57 இடங்கள்தான் கிடைக்க வாய்ப்பாம். அதாவது 51 முதல் 63 இடங்கள் வரைதான் கிடைக்குமாம். கடந்த தேர்தலைவிட 2.7% வாக்குகளே கூடுதலாக கிடைக்குமாம்.

தேசியவாத காங்கிரஸ் -33

தேசியவாத காங்கிரஸ் -33

தேசியவாத காங்கிரஸ் கட்சி அனேகமாக 33 தொகுதிகளைக் கைப்பற்றலாம். 28 முதல் 38 இடங்கள் வரை தேசியவாத காங்கிரஸுக்கு கிடைக்கலாம். கடந்த தேர்தலை ஒப்பிடுகையில் 2.4% வாக்குகள் குறைந்து போகும் என்கிறது கணிப்பு.

காங்கிரஸ் படுதோல்வி

காங்கிரஸ் படுதோல்வி

காங்கிரஸ் கட்சிக்கு 30 இடங்கள்தான் கிடைக்குமாம். 25 முதல் 35 தொகுதிகள்தான் காங்கிரஸுக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாம். கடந்த தேர்தலை விட சுமார் 7% வாக்குகள் காங்கிரஸுக்கு குறைவாகவே கிடைக்குமாம்.

மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா

மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா

கடந்த தேர்தலில் 13 இடங்களைக் கைப்பற்றிய ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா இம்முறை 10 தொகுதிகளைக் கைப்பற்றலாம். அதாவது 7 முதல் 13 தொகுதிகள் வரை கைப்பற்றலாம். கடந்த தேர்தலை ஒப்பிடுகையில் அதன் வாக்கு சதவீதம் 0.7% என்ற அளவுக்குத்தான் குறையுமாம்.

இதர கட்சிகள்..

இதர கட்சிகள்..

இம்மாநிலத்தில் இதர கட்சிகள் 25 தொகுதிகள் வரை கைப்பற்ற வாய்ப்புள்ளதாம்.

உத்தவ் தாக்கரேவுக்கே ஆதரவு

உத்தவ் தாக்கரேவுக்கே ஆதரவு

முதல்வர் பதவியைப் பொறுத்தவரையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு 16% பேர் ஆதரவு இருக்கிறது. பாஜகவின் நிதின் கட்காரிக்கு 11%, காங்கிரஸின் பிரித்விராஜ் சவானுக்கு 9% ஆதரவு உள்ளதாம்.

பாஜகவுக்கு..

பாஜகவுக்கு..

அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சி யாரை முதல்வர் வேட்பாளராக நிறுத்தினாலும் 18% பேர் ஆதரவு அளிக்க தயாராக உள்ளனர் என்கிறது இந்தியா டுடே கருத்து கணிப்பு.

English summary
Despite the break-up of the two principal political alliances in Maharashtra, the state could well be heading for a re-marriage of the old partners or witness the formation of new alliances after October 19 when the votes for the Assembly polls will be counted. The India Today Group-Cicero opinion poll has predicted that the BJP may win 133 of the 288 seats in Maharashtra, putting the saffron party within striking distance of forming a government on its own. The party, which won 46 seats in 2009, also gains significantly in vote share with a jump from 14 per cent in 2009 to 30 per cent projected this year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X