பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசம் ஆகும் - விமானப்படை அதிகாரி சூளுரை
ஜம்மு: இந்தியாவின் அழகிய பிரதேசமான ஜம்மு-காஷ்மீர் எப்போதும் பதட்டம் நிறைந்தவையாகவே பார்க்கப்படுகிறது. பயங்கரவாதிகள் ஊடுருவல், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் என்பது அங்கு தொடர்கதையாக இருந்து வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக ஜம்மு-காஷ்மீர் கொஞ்சம் அமைதியாக இருந்த நிலையில் சமீபத்திய சில நாட்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் மீண்டும் அதிகரித்து வருகிறது. அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர்.

அமித்ஷா நேரில் ஆய்வு
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு-காஷ்மீருக்கு நேரடியாக ஆய்வு செய்து நிலைமை குறித்து அதிகாரிகளிடம் ஆய்வு நடத்தினார். இந்த நிலையில் என்றாவது ஒருநாள், இந்தியா முழு காஷ்மீரையும் கைப்பற்றும் என்று மேற்கத்திய ஏர் கமாண்ட்-ன் தலைமை விமான அதிகாரி ஏர் மார்ஷல் அமித் தேவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- இந்திய விமானப்படை மற்றும் இராணுவம் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் காஷ்மீரின் சுதந்திரத்தை உறுதி செய்தன.

முழு காஷ்மீரையும் கைப்பற்றுவோம்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் காஷ்மீருடன் சேரும் காலம் வரும். ஐ,நா தலையிடாமல் இருந்திருந்தால், முழு காஷ்மீரும் நம்முடையதாக இருந்திருக்கும். வரும் ஆண்டுகளில் முழு காஷ்மீரையும் நாம் கைப்பற்றுவோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆனாலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை கைப்பற்றுவதற்கு தற்போது எந்த திட்டமும் இல்லை. இன்றோ நாளையோ, தேசங்கள் ஒன்று சேரும் என்பதற்கு வரலாறு சாட்சி. தற்போது எங்களிடம் இது தொடர்பான எந்த திட்டமும் இல்லை, ஆனால், கடவுள் விரும்பினால், அது எப்போதும் செயல்பாட்டில் இருக்கும்.

வலிமையான இராணுவம்
ஏனெனில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்கள் பாகிஸ்தானியர்களால் மிகவும் நியாயமாக நடத்தப்படுவதில்லை. தொழில்நுட்பத்தின் மாற்ற விகிதம் இன்று உலகில் மிக வேகமாக உள்ளது, அதை நாம் வேகத்தில் வைத்திருக்க வேண்டும். பொருளாதாரத்தில் வளர்ச்சியடையும் எந்தவொரு தேசமும் வலிமையான இராணுவத்தைக் கொண்டிருக்க வேண்டும். வரும் ஆண்டுகளில் தேசத்திற்கான நமது கடமையை நிறைவேற்ற வேண்டும். மேலும் சவாலுக்கு நாம் எப்போதும் தயாராக இருக்கிறோம்.
Recommended Video

ட்ரோன் தாக்குதல்கள்
ஜம்மு-காஷ்மீரில் ட்ரோன் தாக்குதல்கள் குறித்து கேள்வி எழுப்புகிறீர்கள். நம்மிடம் ட்ரோன் தாக்குதலுக்கு எதிரான உபகரணங்கள் உள்ளன. இதனை காஷ்மீரிலும் பயன்படுத்தி வருகிறோம். ட்ரோன் சவால் ஒரு சிறிய சவால், அந்தச் சவாலை எப்போது வந்தாலும் சமாளிக்க முடியும், இவ்வாறு விமான அதிகாரி ஏர் மார்ஷல் அமித் தேவ் கூறினார்.












Click it and Unblock the Notifications