கள்ளக்காதல்: 2008ல் இருந்து இதுவரை ஆஷ்லி மேடிசன் வெப்சைட்டுக்கு ரூ.2.4 கோடி செலுத்திய இந்தியர்கள்

Subscribe to Oneindia Tamil

மும்பை: ஆஷ்லி மேடிசன் இணையதளம் மூலம் கள்ளத்தொடர்பு வைத்துக் கொள்ள இந்தியர்கள் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து இதுவரை ரூ.2.4 கோடி செலவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

திருமணமானவர்கள் தங்களின் வாழ்க்கைத் துணைக்கு தெரியாமல் கள்ளக்காதல் செய்ய உதவும் இணையதளம் ஆஷ்லி மேடிசன். அந்த இணையதளம் அண்மையில் ஹேக் செய்யப்பட்டது. மேலும் ஆஷ்லி மேடிசன் இணையதளத்தை இந்தியாவில் அதிகம் பயன்படுத்துவோரில் முதலிடம் டெல்லிகாரர்களுக்கும், இரண்டாவது இடம் மும்பைக்காரர்களுக்கும், மூன்றாவது இடம் சென்னைவாசிகளுக்கும் கிடைத்துள்ளது.

அந்த இணையதளத்தில் எத்தனை இந்தியர்கள் பணம் கட்டி கள்ளக்காதல் செய்துள்ளனர் என்ற விவரம் தெரிய வந்துள்ளது.

ரூ.2.4 கோடி

ரூ.2.4 கோடி

ஆஷ்லி மேடிசன் இணையதளத்தில் கடந்த 2008ம் ஆண்டு முதல் இதுவரை 5 ஆயிரத்து 236 இந்தியர்கள் பணம் செலுத்தி கள்ளக்காதல் செய்துள்ளனர். அவர்கள் செலுத்திய தொகை ரூ.2.4 கோடி ஆகும்.

2008

2008

2008ம் ஆண்டில் இந்தியாவில் ஆஷ்லி மேடிசன் இணையதளத்தில் ரூ.198 பணம் செலுத்தியுள்ளனர். இந்த தொகை 2009ல் ரூ.958 ஆக அதிகரித்துள்ளது.

2010

2010

2010ம் ஆண்டில் ஆஷ்லி மேடிசன் இணையதளம் மூலம் கள்ளக்காதல் வைத்துக் கொள்ள ரூ.2 ஆயிரத்து 957 செலுத்தப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டில் ரூ. 4 ஆயிரத்து 795 கட்டணமாகவும், 2012ம் ஆண்டில் ரூ.8 ஆயிரத்து 297 கட்டணமாகவும் செலுத்தப்பட்டுள்ளது.

2015

2015

2013ம் ஆண்டில் ரூ. 10 லட்சத்து 64 ஆயிரத்து 688 கட்டணமாகவும், 2014ம் ஆண்டில் ரூ.1 கோடியே 56 லட்சத்து 63 ஆயிரத்து 870ம், 2015ம் ஆண்டில் ரூ.72 லட்சத்து 98 ஆயிரத்து 610 கட்டணமாகவும் செலுத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+