"லட்டுல வைப்பேனு பார்த்தியா.. நட்டுல வைச்சேன்".. ரீல்ஸால் சிக்கிய கணவன்.. பொறி வைத்து பிடித்த மனைவி
லக்னோ: திருமணம் உறவு முறிவு அதிகரித்து கொண்டிருக்கிறது. சட்டபூர்வ விவாகரத்து, திடீரென வாழ்க்கை துணையை விட்டு மாயமாவது போன்ற சம்பவங்கள் வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் தன் மனைவியை பிரிந்து 7 ஆண்டுகள் மாயமான கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். மனைவியை பிரிந்து மற்றொரு பெண்ணை திருமணம் செய்த அந்த நபர், சிக்கிய விதம் தான் செம ஹைலைட்
இந்தியாவில் திருமண விவாகரத்து மிகவும் சகஜமாகிவிட்டது. அனைத்து மாநிலங்களிலும் விவாகரத்து அதிகளவு நடைபெறுகிறது. புதிதாக திருமணம் ஆனவர்கள், நீண்ட காலமாக திருமண வாழ்வில் இருப்போர் உள்ளிட்ட அனைத்து தரப்பிலும் விவாகரத்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திரைத்துறை, அரசியல், விளையாட்டு என்று எந்த துறையும் இதற்கு விதிவிலக்கில்லை.

7 வருடங்களுக்கு பிறகு
சட்ட ரீதியாக விவாகரத்து அதிகளவு நடைபெறும் நேரத்தில், பலர் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் தங்கள் வாழ்க்கை துணையை விட்டு பிரிந்து செல்லும் சம்பவங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. இதனால் பல குடும்பங்கள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றன. அப்படி மாயமானவர்கள், மாயமானவர்கள் தான். அவர்கள் மீண்டும் வருவது மிகவும் அரிது.
அப்படி அரிதாக வராதவர்கள், சில நேரங்களில் கையும், களவுமாக சிக்குவார்கள். உத்தரப்பிரதேசத்தில், மனைவியை விட்டு சென்ற கணவன் 7 வருடங்களுக்கு பிறகு வசமாக சிக்கியுள்ளார். உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜிதேந்திர குமார் என்கிற பப்லு. இவருக்கு ஷீலு என்ற பெண்ணுடன் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
மாயம்
ஆனால் அந்த உறவு ஓராண்டு கூட நீடிக்கவில்லை. திருமணம் ஆனதில் இருந்தே ஜிதேந்திர குமார், தன் மனைவி ஷீலுவை வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளார். தனக்கு தங்க செயின், மோதிரம் வேண்டும் என்று ஷீலுவை துன்புறுத்தியுள்ளார். அவர் சொன்னதை எல்லாம் செய்யாத காரணத்தால் ஷீலுவை வீட்டை விட்டு துரத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக ஷீலுவின் குடும்பத்தினர், ஜிதேந்திரகுமார் மீது காவல் நிலையத்தில் வரதட்சனை கொடுமை பிரிவில் புகார் அளித்தார்கள். காவல்துறையினர் விசாரணையை தொடங்கிய நிலையில் ஜிதேந்திரகுமார் திடீரென மாயமாகியுள்ளார். இதுதொடர்பாக அவரின் அப்பா 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் காவல் நிலையத்தில் காணவில்லை என்கிற புகாரை அளித்தார்.
ரீல்ஸ் பரிதாபங்கள்
காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடினர். ஆனால் எங்கு தேடியும் ஜிதேந்திரகுமார் கிடைக்கவில்லை. இதனால் தங்கள் மகனை ஷீலு குடும்பத்தினர் கொலை செய்துவிட்டதாக ஜிதேந்திரகுமாரின் குடும்பத்தினர் புகார் தெரிவித்தனர். இதனால் ஷீலு மற்றும் அவரின் குடும்பத்தினர் என்ன செய்வது என்று அறியாமல் தவித்து வந்தார்கள்.
இந்நிலையில் ஷீலு எதேர்ச்சையாக இன்ஸ்டாகிராம் பார்த்து கொண்டிருந்தபோது, அதில் ஜிதேந்திரகுமார் வேறு பெண்ணுடன் ரீல்ஸ் செய்த வீடியோ கண்ணில் பட்டுள்ளது. 7 வருடங்களுக்கு பிறகு தன் கணவரை பற்றி தகவல் தெரிந்த நிலையில், ஷீலு உடனடியாக கோட்வலி சந்திலா காவல்நிலையத்தில் சொல்லியுள்ளார்.
கைது
இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணையை தொடங்கினார்கள். அதில் ஜிதேந்திரகுமார் லூதியானா தப்பி சென்று, அங்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் மீது வரதட்சனை, மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications