For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

DC vs SRH: சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள், தடுமாறிய பந்துவீச்சாளர்கள் - அசால்டாக வென்ற டெல்லி

By BBC News தமிழ்
|
IPL 2021: How DC won the match against SRH easily
Getty Images
IPL 2021: How DC won the match against SRH easily

ஐபிஎல் 2021 சீசனின் 33ஆவது போட்டி துபாய் மைதானத்தில் நேற்று (செப் 22, புதன்கிழமை) நடந்தது. அதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அனாயாசமாக வென்றது.

ஹைதராபாத் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள் சொதப்பியதோடு, அவ்வணியின் பந்துவீச்சாளர்கள் டெல்லி பேட்ஸ்மென்களை வீழ்த்த முடியாமல் திணறியது டெல்லியின் வெற்றியை எளிதாக்கியது.

கொரோனா காரணமாக தமிழகத்தின் நடராஜன் இப்போட்டியில் பங்கேற்கவில்லை. ஒருவேளை பங்கேற்றிருந்தால் இடது கை சீமரைப் பயன்படுத்தி ஹைதராபாத் அணி, டெல்லியோடு இன்னும் சிறப்பாக மோதிப் பார்த்திருக்கலாம்.

135 மட்டுமே இலக்கு

டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. ஹைதராபாத் அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் வார்னர் ரன்கள் ஏதும் எடுக்காமல் தன் விக்கெட்டை பறிகொடுத்தார். விரித்திமான் சாஹா 18 ரன்களுக்கும், அணியின் புதிய தலைவர் கேன் வில்லியம்சன் 18 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். டாப் ஆர்டர் பேட்ஸ்மென்களின் இந்த விக்கெட் சரிவு ஹைதராபாத்துக்கு பெரும் பின்னனைவை ஏற்படுத்தியது.

20 ஓவர் முடிவு வரை தொடர்ந்து ஒரு வலுவான பேட்டிங் இணையை அமைக்க முடியாமல் தடுமாறியது ஹைதராபாத் அணி. ஹைதராபாத் தரப்பில் வில்லியம்சன் மற்றும் மணீஷ் பாண்டே ஜோடி மட்டுமே 30 பந்துகளில் 31 ரன்களை குவித்தது. மற்ற எல்லா இணைகளும் காலூன்றி நிற்பதற்குள் விக்கெட்டைப் பறிகொடுத்து வெளியேறினர்.

இந்த போட்டியில் அப்துல் சமத் அடித்த 28 ரன்கள் தான் ஹைதராபத் அணி வீரர்களிலேயே குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள். அவரைத் தொடர்ந்து பந்துவீச்சாளர் ரஷீத் கான் அடித்த 22 ரன்கள் தான் இரண்டாவது அதிகபட்ச ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

19.5ஆவது பந்தில் ரிஷப் பந்த் புவனேஷ்வர் குமார் - சந்தீப் ஷர்மா ஜோடியை ரன் அவுட் செய்ய முயன்றார், ஆனால் ரிஷப்பின் இலக்கு தவறியதால் விக்கெட் தப்பியது. ஆனால், அடுத்த பந்தையும் அதே போல வீசி 19.6ஆவது பந்திலும் சந்தீப் ஷர்மாவை ரன் அவுட் செய்து, 10ஆவது விக்கெட்டை வீழ்த்தினார் டெல்லி அணித் தலைவர் ரிஷப் பந்த்.

அன்ரிச் நார்ட்ஜ், ககிஸோ ரபாடா, அக்ஸர் படேல், அவேஷ் கான், அஸ்வின் என அனைத்து டெல்லி பந்துவீச்சாளர்களும் சிறப்பாக பந்துவீசினர்.

ரபாடா விரித்திமான் சாஹா, அடித்து விளையாடிய அப்துல் சமத் உட்பட 3 விக்கெட்டுகளையும், நார்ட்ஜ் டேவிட் வார்னர் உட்பட 2 விக்கெட்டுகளையும், அக்ஸர் படேல் கேன் வில்லியம்சன் உட்பட இரு விக்கெட்களையும் வீழ்த்தினர்.

அவேஸ் கான் மற்றும் அஸ்வின் விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை என்றாலும் ஹைதராபாத்தின் ரன்ரேட் அதிகரிக்காமல் பார்த்துக் கொண்டனர்.

13 பந்துகளுக்கு முன்பே ஆட்டத்தை முடித்த டெல்லி

புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரரான ப்ரித்வி ஷா 11 ரன்களில் வில்லியம்சன்னிடம் கேட்ச் கொடுத்த விக்கெட்டை பறிகொடுத்தார். ஷிகர் தவான் 42 ரன்களில் வீழ்ந்தாலும், ஸ்ரேயாஸ் ஐயர் (47 ரன்கள்) மற்றும் டெல்லி அணித் தலைவர் ரிஷப் பந்த் (35 ரன்கள்) குவித்து அணியை வெற்றி பெறச் செய்தனர்.

ஹைதராபாத் பந்துவீச்சாளர்களில் இடது கை யார்க்கர் நடராஜன் இல்லாத குறை இருந்தது. ஹைதராபாத்தால் தேவையான நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாததன் விளைவாக டெல்லி அனாயாசமாக 17.5ஆவது பந்திலேயே, எட்டு விக்கெட் கையிருப்போடு 139 ரன்களை எடுத்து வெற்றிக்கனியைப் பறித்தது.

ஷிகர் தவான் முதலிடம்

ஐபிஎல் 2021 சீசனில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மென்கள் பட்டியலில் 422 ரன்களோடு முதலிடத்தில் இருக்கிறார் ஷிகர் தவான்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இந்த வெற்றியின் மூலம் மீண்டும் தன் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டு தன் ப்ளே ஆஃப் வாய்ப்பை வலுப்படுத்தியுள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தொடர் தோல்விகளால் கடைசி இடத்தில் இருக்கிறது.

இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை இந்தியன்ஸ் (4ஆவது இடத்தில் இருக்கிறது) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (6ஆவது இடத்தில் இருக்கிறது) அணிகளுக்கு இடையில், அபுதாபி மைதானத்தில் பலப்பரிட்சை நடக்கவிருக்கிறது. இரு அணிகளுமே ப்ளே ஆஃப்க்கு முன்னேற இது முக்கியமான போட்டி என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

BBC Tamil
English summary
IPL 2021: How DC won the match against SRH easily
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X