அயோத்தி வழக்கை தொடர்ந்த.. இக்பால் அன்சாரிக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க அழைப்பு
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் வரும் 22ம் தேதி கும்பாபிஷேகத்துடன் திறக்கப்பட உள்ளது. இதற்காக அழைப்பிதழ் வழங்கப்பட்டு வரும் நிலையில், அயோத்தி வழக்கு விவகாரத்தில் முஸ்லிம் தரப்பு மனுதாரராக இருந்த இக்பால் அன்சாரிக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக நீடித்த சட்ட போராட்டங்களுக்கு பிறகு கடந்த 2019ல் உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி அயோத்தியில் சர்ச்சைக்குரியதாக கருதப்பட்ட இடத்தில் அயோத்தி ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணியை மேற்கொள்ள ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை அமைக்கப்பட்டது.

அதன்பிறகு பிரதமர் மோடி 2019ல் அடிக்கல் நாட்டினார். தற்போது அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. முதற்கட்ட பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் அயோத்தி ராமர் கோவில் வரும் 22ம் தேதி கும்பாபிஷேகத்துடன் திறக்கப்பட உள்ளது. பிரதமர் நரேந்திரமோடி கோவில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்படும் ராமர் சிலையை எடுத்து வந்து வழங்க உள்ளார்.
இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள், ஆளுநர்கள், முதல்வர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட பல்வேறு துறைகளில் சாதித்த பிரபலங்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். தற்போது ஒவ்வொருவருக்கும் கோவில் அறக்கட்டளை சார்பில் அழைப்பிதழ் என்பது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அயோத்தி விவகாரத்தில் முஸ்லிம் தரப்பு மனுதாரராக இருந்த இக்பால் அன்சாரிக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக உச்ச நீதிமன்றம் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கியதையடுத்து ராமர் கோயில் பூமி பூஜை போடுவதற்கான முதல் அழைப்பிதழ் இக்பாலுக்குதான் வழங்கப்பட்டு இருந்தது. ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் வழங்கப்பட்டது தொடர்பாக இக்பால் அன்சாரி செய்தியாளர்களிடம் கூறுகையில், " ராமர் கோவிலில் ராமர் சிலை நிறுவப்பட உள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்து - முஸ்லிம் - சிக்கியர் - கிறிஸ்தவ சமூகங்களின் நல்லிணக்கத்திற்கான இடம் அயோத்தி. இது அப்படியே தொடர வேண்டும். உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு நாடு முழுவதும் உள்ள முஸ்லீம்கள் மதிப்பு கொடுத்தனர். எங்குமே போராட்டம் நடைபெறவில்லை. அயோத்தி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள். நானும் மகிழ்ச்சியில் உள்ளேன்" என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications