For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விநாயகர் சதுர்த்திக்கு லட்சக்கணக்கான லட்டுகள் ரெடி - பக்தர்களுக்கு பிரசாதம் #vinayagachaturthi

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ஜெய்பூர்: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிரசித்திபெற்ற விநாயகர் கோயிலில் பாரம்பரிய லட்டு திருவிழா விமரிசையாக தொடங்கியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெப்பூரில் உள்ள பிரசித்திபெற்ற மோதி துங்கரி விநாயகர் கோயிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இதனையொட்டி நடைபெறும் பாரம்பரிய லட்டு திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

விநாயகர் சதுர்த்தி திருவிழா திங்கட்கிழமை நாடெங்கும் கொண்டாடப்பட உள்ளது. தையொட்டி விநாயகர் சிலைகள் தயாராகி வருகின்றன. அது போல விநாயகருக்கு படைப்பதற்கான நைவேத்தியப் பொருட்களும் தயாராகி வருகின்றன.

பிரம்மாண்ட லட்டுகள்

ஆந்திராவைச் சேர்ந்த சுவீட் கடைக்காரர் மல்லிகார் ஜுனராவ் என்பவர் விநாயகர் சதுர்த்திக்காக பிரமாண்ட லட்டு தயாரித்து கொடுப்பதை வழக்கத்தில் வைத்துள்ளார். கடந்த ஆண்டு அவர் 6 ஆயிரம் கிலோ எடையுள்ள பிரமாண்ட லட்டு தயாரித்து கொடுத்தார்.

பக்தர்களுக்கு லட்டு

பக்தர்களுக்கு லட்டு

விநாயகர் சிலைகள் உசைன்சாகர் ஏரியில் கரைக்கப்பட்ட பிறகு அந்த பிரமாண்ட லட்டை பக்தர்களுக்கு வினியோகம் செய்வதில் கடும் சிரமம் ஏற்பட்டது. எனவே ஹைதராபாத் விநாயக உற்சவ விழா ஏற்பாட்டாளர்கள் கேட்டு கொண்டதற்கு இணங்க இந்த ஆண்டு அவர் மிகப்பிரம்மாண்ட எடையுள்ள லட்டு தயாரித்து கொடுத்துள்ளார்.

லட்டுவில் சாதனை

லட்டுவில் சாதனை

மல்லிகார்ஜுனராவ் தமது அனுபவத்தின் அடிப்படையில் பிரமாண்ட லட்டு தயாரித்து உலக சாதனை படைக்க முடிவு செய்தார். இந்தியாவில் இதுவரை குஜராத் மாநிலத்தில் உள்ள அம்பஜிமாதா தேவஸ்தானம் சார்பில் தயாரிக்கப்பட்ட 11,115 கிலோ எடையுள்ள லட்டுதான் சாதனையாக உள்ளது.

12,500 கிலோ லட்டு

12,500 கிலோ லட்டு

அந்த சாதனையை முறியடிக்கும் வகையில் தற்போது 12,500 கிலோ எடையுள்ள லட்டை மல்லிகார்ஜுனராவ் தயாரித்துள்ளார். இந்த பிரமாண்ட லட்டை அவர் விசாகப்பட்டினத்தில் உள்ள விநாயகர் ஆலயத்துக்கு அளிக்க திட்டமிட்டுள்ளார்.

பக்தர்களுக்கு பிரசாதம்

பக்தர்களுக்கு பிரசாதம்

12,500 கிலோ எடையுள்ள லட்டு தயாரிக்க மல்லிகார்ஜுனராவுக்கு ரூ.30 லட்சம் செலவாகி உள்ளது. அந்த லட்டு தயாரிக்க 3350 கிலோ மாவு, 4950 கிலோ சர்க்கரை, 2400 கிலோ நெய், 400 கிலோ முந்திரி, 200 கிலோ பிஸ்தா பயன்படுத்தப்பட்டுள்ளது. விநாயகர்சதுர்த்தி விழா முடிந்ததும் 12,500 கிலோ லட்டை உடைத்து பக்தர்களுக்கு வினியோகிக்க திட்டமிட்டுள்ளனர்.

ராஜஸ்தான் 1,25,000 லட்டுகள்

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் உள்ள மோடி துன்கிரி கோயிலில் விநாயகர் சதூர்த்தி தினத்தை கோலாகலமாக கொண்டாடும் வகையில், 1,25,000 லட்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த கோயிலில் விநாயகர் சதுர்த்தியை ஒரு வார காலம் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டு கொண்டாடி வருகின்றனர்.

மெகா சைஸ் லட்டு

100 கிராம், 51 கிலோ மற்றும் 151 கிலோ போன்ற எடைகளில் தயாரிக்கப்பட்ட ஒரு லட்சத்து 25 ஆயிரம் லட்டுகள் கோயில் முழுவதும் அழகுற வைக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக 251 கிலோ எடைகொண்ட பிரம்மாண்ட லட்டு, காண்போரை வெகுவாக ஈர்த்து வருகிறது. இந்த லட்டு திருவிழாவை, ஏராளமானோர் பார்வையிட்டு வருகின்றனர். இந்த லட்டுகள், சுவாமிக்கு படையலிட்டப் பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

English summary
jaipur ladoo festival ahead of ganpati festival the temple has offered 125000 ladoos to lord ganesha Heaviest size of "ladoo" in this exhibition is 251 kg & there is full range of size like 151 kg, 51 kg & 100 gm.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X