காஷ்மீர் சட்டசபை தேர்தலை சீர்குலைக்கும் பயங்கரவாதிகள்! ராணுவ முகாம் மீது தாக்குதல்!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலை சீர்குலைக்கும் வகையில் சஞ்ஜ்வான் என்ற இடத்தில் ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் படுகாயமடைந்தார். இதனையடுத்து பயங்கரவாதிகளை தேடும் நடவடிக்கையை பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் உருவாக்கப்பட்ட பின்னர் முதலாவது சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஜம்மு காஷ்மீரில் 3 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலில் அரசியல் கட்சிகள் மும்முரமாக களமிறங்கி உள்ளன. வேட்பு மனுத் தாக்கல், வேட்பாளர்கள் அறிவிப்பு, கட்சி தாவல்கள், சர்ச்சைக்குரிய கருத்துகள் என ஜம்மு காஷ்மீர் தேர்தல் களைகட்டி இருக்கிறது.

ஜம்மு காஷ்மீரில் பிரதமர் மோடி, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் காஷ்மீர் தேர்தலை சீர்குலைக்கும் வகையில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜம்மு தர்பார் என்ற இடத்தில் சஞ்ஜ்வான் ராணுவ முகாம் மீது இன்று காலை 10.50 மணியளவில் திடீரென பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ராணுவ முகாம் காவலரண் அருகே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் நமது ராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்தார்.
இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் பாதுகாப்புப் படையினர் அனைத்து இடங்களிலும் உஷார் நிலையில் நிறுத்தப்பட்டும் உள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் பந்திபோரா பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்த பாகிஸ்தான் பகுதியில் தீவிரவாதிகள் சில நாட்களுக்கு முன்னர் ஊடுருவ முயன்றனர். இதனையடுத்து பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதேபோல குப்வாரா பகுதியில் நடைபெற்ற மோதல்களில் 3 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். செப்டம்பர் 18-ந் தேதி முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுவதால் பயங்கரவாதிகள் வெறிச்செயலில் தொடர்ந்து ஈடுபட வாய்ப்புள்ளதால் பாதுகாப்புப் படையினர் எதனையும் எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications