ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: 27 பேர் பலி, சவுதியில் இருந்து அமித்ஷாவுக்கு போன் போட்ட மோடி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 27 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 12 சுற்றுலாப் பயணிகள் படுகாயமடைந்துள்ளனர். பயங்கரவாதிகளின் இந்த கொடூரத் தாக்குதல் தொடர்பாக சவுதி அரேபியாவில் இருந்து பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தொடர்பு கொண்டு விவரங்களைக் கேட்டறிந்தார்.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பஹல்காம் என்ற சுற்றுலா தலத்தில் தங்கும் விடுதி மீது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் கொடூரத் தாக்குதல் நடத்தினர். அந்த சுற்றுலா தலத்தில் குதிரையில் பயணித்த சுற்றுலாப் பயணிகள் மீது ஈவிரக்கமே இல்லாமல் பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் சம்பவ இடத்திலேயே 27 பேர் உயிரிழந்தனர். மேலும் தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 12 பேர் படுகாயமடைந்தனர்.

ஜம்மு காஷ்மீரின் பைசரன் பள்ளத்தாக்கில் நடந்த இந்த கொடூரப் படுகொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Kashmir

இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இதனிடையே சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தொடர்பு கொண்டு, காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விவரங்களைக் கேட்டறிந்தார்.

இது தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி தம்மிடம் காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் குறித்து கேட்டறிந்தார். வீடியோ கான்பரன்ஸ் மூலம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது என தெரிவித்துள்ளார். மேலும் பயங்கரவாத தாக்குதல் நடந்த பகுதியை பார்வையிட தாம் நேரில் செல்ல இருப்பதாகவும் அமித்ஷா தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறுகையில், பயங்கரவாத தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் தெரிவிக்கப்படும். பயங்கரவாதிகளின் இந்த தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இத்கைய கோடூரமான பயங்கரவாத தாக்குதல்களை கண்டிப்பதற்கு வார்த்தைகளே இல்லை எனலாம். இந்த பயங்கரவாத தாக்குதலில் பலியானோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+