For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மலிவு விலை சீனாவா, ஜப்பானின் தரமா? புல்லட் ரயிலை யாரிடம் வாங்குவது என இந்தியா யோசனை!

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் அறிமுகமாக உள்ள புல்லட் ரயில் திட்டத்திற்கான ரயில் தடவாளங்களை சப்ளை செய்ய ஜப்பானும், சீனாவும் போட்டி போட்டு வருகின்றன. ஜப்பான் தயாரிப்பு தரமானதாக உள்ள நிலையில், சீன தயாரிப்பு விலை குறைந்ததாக இருப்பதால் இதுவரை இந்தியா எந்த முடிவையும் எடுக்கவில்லை.

எங்கெல்லாம் புல்லட் ரயில்?

எங்கெல்லாம் புல்லட் ரயில்?

மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்த முதலாவது ரயில்வே பட்ஜெட்டில் புல்லட் ரயில் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியானது. இதன்படி, மைசூரிலிருந்து பெங்களூர் வழியாக சென்னை, டெல்லி-ஆக்ரா, டெல்லி-சண்டீகர், மும்பை-கோவா, ஹைதராபாத்-செகந்திராபாத் ஆகிய நகரங்களுக்கிடையே அதிவேக புல்லட் ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஜப்பான் தொடங்கியது

ஜப்பான் தொடங்கியது

இதில் அகமதாபாத்-மும்பை நடுவேயான வழித்தடத்தை ஜப்பான் நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது. பிற வழித்தடங்களில் ரயில் பாதை அமைப்பது குறித்த பூர்வாங்க பணிகள் இன்னும் தொடங்கவில்லை. இதனிடையே, ஜப்பான் மற்றும் சீனா நாடுகள் தங்களது ரயில் நெட்வொர்க் திட்டத்தை இந்தியாவில் செயல்படுத்தவும், ரயில் பெட்டிகளை விற்பனை செய்யவும் ஆர்வம் காட்டி வருகின்றன.

சீனா முதலிடம்

சீனா முதலிடம்

உலகிலேயே சீனாவில்தான் மிக நீண்ட புல்லட் ரயில் நெட்வொர்க் உள்ளது. தற்போது 11 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் அதிவேக ரயில் பாதைகளால் இணைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தாண்டு இறுதிக்குள் இந்த தூரத்தை 19 ஆயிரம் கிலோமீட்டராக அதிகரிக்க உள்ளது சீனா. சீன பிரதமர் ஜி ஜின்பிங் வரும் செப்டம்பர் மாதம் இந்தியா வரும்போது, புல்லட் ரயில் திட்ட செயலாக்கம் குறித்து நமது பிரதமர் மோடியிடம் பேச உள்ளார்.

மோடி ஜப்பான் பயணம்

மோடி ஜப்பான் பயணம்

இந்தவாரம் சனிக்கிழமை மோடி, ஜப்பான் நாட்டுக்கு செல்ல உள்ளார். அந்த நாட்டின் கியோடோ நகருக்கு முதலில் செல்லும் மோடி, அங்கு செயல்படுத்தப்படும் புல்லட் ரயில் திட்டத்தை பார்வையிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிவேக ரயில் நெட்வொர்க் குறித்து ஜப்பான் பிரதமர் சின்சோ அபே மற்றும் மோடி அப்போது ஆலோசனை நடத்த உள்ளனர்.

தரமிருந்தால், விலையில்லை..

தரமிருந்தால், விலையில்லை..

ஜப்பான், சீனா ஆகிய இரு நாடுகளின் பிரதமர்களுமே புல்லட் ரயில் குறித்து மோடியுடன் ஆலோசிக்க உள்ளதால், அதன்பிறகுதான் எந்த நாட்டு தொழில்நுட்ப உதவியுடன் அதிவேக ரயில் திட்டம் இந்தியாவில் அமலாகும் என்பது தெரியவரும். ஜப்பானை பொறுத்தளவில் அதன் தரம் மிகவும் பிரமாதமாக உள்ளது. ஆனால் ஜப்பானைவிட சீனாவின் தளவாடங்கள் குறைந்த விலை கொண்டவையாக உள்ளன. எனவே தரமா, விலையா எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற கேள்விதான் இந்தியா முன்பு நிற்கிறது.

English summary
China and Japan are once again in competition, this time for the lucrative high speed rail network market in India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X