For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வயர் சேரில் அமர ஜெயலலிதாவுக்கு அனுமதி.. !

Google Oneindia Tamil News

Jaya allowed to use wire knit chair
பெங்களூர்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்காக சென்னையிலிருந்து கொண்டு வரப்பட்ட வயரால் பின்னிய சேரில் உட்கார பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகம் அனுமதி கொடுத்துள்ளது.

முதுகு வலி காரணமாக இந்த சேரில்தான் உட்காருவார் ஜெயலலிதா. இதற்காக கடந்த முறை ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவைப் பார்க்க சிறைக்கு வந்தபோது இந்த சேரைக் கையோடு எடுத்துக் கொண்டு வந்திருந்தார்.

ஆனால் வெளியிலிருந்து எந்த பர்னிச்சரும் அனுமதிக்கப்பட முடியாது என்று கூறி சிறை நிர்வாகம் அனுமதி தர மறுத்து விட்டது. இந்த நிலையில் தற்போது இந்த சேரை ஜெயலலிதா பயன்படுத்திக் கொள்ள அனுமதி தரப்பட்டுள்ளதாம்.

முதுகு வலி காரணமாக ஜெயலலிதா அவதிப்பட்டு வருவதால் இந்த சேரை பயன்படுத்திக் கொள்ள சிறை நிர்வாகம் அனுமதி கொடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

முழு திருப்தியில் ஜெயலலிதா

மேலும் ஜெயலலிதாவுக்காக ஒரு பெண் எஸ்கார்ட்டும், மருத்துவ அதிகாரியும் வழங்கப்பட்டுள்ளனர். தனக்கு வழங்கப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஜெயலலிதா முழு திருப்தி தெரிவித்துள்ளதாகவும் சிறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பால் பழம் பிரட்

தினசரி காலையில் எழுந்து சிறை வளாகத்திலேயே வாக்கிங் போகிறார் ஜெயலலிதா செய்தித் தாள்களை தவறாமல் படிக்கிறார். அவரது உணவில் பால், பழங்கள், பிரட், சப்பாத்தி, தயிர்சாதம் ஆகியவை தவறாமல் இடம் பெறுவதாகவும் சிறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
Bangalore jail authority has allowd ADMK supremo Jayalalitha to use wire knit chair, that was brought from her Chennai residence.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X