ஜெ. சொத்து குவிப்பு வழக்கு: இளவரசி வக்கீலுக்கும் குட்டு வைத்த நீதிபதி குமாரசாமி
பெங்களூரு: வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது இளவரசியின் வழக்கறிஞருக்கும் சிறப்பு பெஞ்ச் நீதிபதி குமாரசாமி கண்டனம் தெரிவித்தார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்பட 4 பேரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இம்மேல்முறையீட்டு மனு மீது தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி முன் தினமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுவரை ஜெயலலிதா, சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் தங்கள் இறுதி வாதத்தை நிறைவு செய்துள்ளனர். அதைத்தொடர்ந்து சுதாகரன், இளவரசி ஆகியோரின் வழக்கறிஞர் சுதந்திரம் ஆஜராகி வாதிட்டு வருகிறார்.
இந்த நிலையில் தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நேற்று நீதிமன்றம் கூடியதும் சுதாகரன், இளவரசி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுதந்திரம் தனது வாதத்தை தொடர்ந்தார். இளவரசி சம்பந்தப்பட்ட சொத்து விவரங்கள் மற்றும் வருமானங்கள் குறித்து அவர் தனது வாதத்தை எடுத்து வைத்தார்.
"குற்றவியல் நடைமுறை சட்டம் 313-ன்படி அரசு தரப்பில் 107 முதல் 120-வது சாட்சிகள் வரை அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் எங்களிடம் கேள்விகள் கேட்கப்படவில்லை" என்றார் சுந்தரம்.
இதற்கு பதிலளித்த நீதிபதி குமாரசாமி, "வாக்குமூலத்தை எடுத்து பாருங்கள். எத்தனை கேள்விகள் கேட்கப்பட்டன" என்று கேள்வி எழுப்பினார்.
வழக்கறிஞர் சுதந்திரம், "650 கேள்விகள் கேட்கப்பட்டன" என்றார். பின்னர் நீதிபதி, அதில் அந்த சாட்சிகள் சம்பந்தப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளன. ஏன் இல்லை என்று தவறாக சொல்கிறீர்கள். நீங்கள் வாக்குமூலத்தை முழுமையாக படிக்கவில்லையா? நீங்கள் வாய்மொழியாக கூறும் தகவல்களை ஏற்க முடியாது. எதை சொன்னாலும் அதற்கு ஆவணங்களை ஆதாரத்துடன் தாக்கல் செய்ய வேண்டும். ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் மட்டுமே நான் தீர்ப்பு எழுத முடியும். வெறும் வாதத்தை விட ஆவணங்களை தாக்கல் செய்து வாதிடுவது தான் மிக முக்கியம். கீழ்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் வாதிடுங்கள் என்று காட்டம் காட்டினார்.
அப்போது அசராத வழக்கறிஞர் சுதந்திரம், இளவரசியின் வீடு ரூ.5.75 கோடியில் கட்டப்பட்டு இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதலாக மதிப்பிட்டுள்ளனர். இது தவறானது என்றார்,
உடனே நீதிபதி, சரி, இதற்கு ஆவணங்கள் இருந்தால் தாருங்கள். கூடுதலாக மதிப்பிட்டுள்ள தொகையை நீக்கி விடுகிறேன். ஏ1 முதல் ஏ4 வரை 4 பேருமே தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்று அவரவர்களின் வழக்கறிஞர்கள் சொல்கிறீர்கள். ஆனால் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கு ஆவணங்கள் உள்ளன.
ஆனால் நீங்கள் அனைவரும் குற்றத்தை ஒட்டுமொத்தமாக மறுக்கிறீர்கள். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தவறான முறையில் பணம் சம்பாதித்து மற்ற 3 பேர்களின் பெயர்களில் சொத்துகளை சேர்த்தார் என்பது லஞ்ச ஒழிப்புத்துறையின் குற்றச்சாட்டு. இதை மறுத்து அதற்கான ஆவணங்களுடன் நீங்கள் வாதிட வேண்டும் என்று மீண்டும் சுட்டிக்காட்டினார்.
இதைபற்றியெல்லாம் கவலைப்படாத வழக்கறிஞர் சுதந்திரம், இந்த வழக்கு தவறாக போடப்பட்டுள்ளது என்றார்.
கடுப்பாகிப் போன நீதிபதி, தவறு என்றால் அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்யுங்கள் என்று மீண்டும் காட்டமாக கூறினார்.
இந்த வழக்கு விசாரணை இன்றும் நடைபெறுகிறது. இன்றுடன் வழக்கறிஞர் சுதந்திரம் தனது வாதத்தை நிறைவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து நிறுவனங்கள் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிடுவர்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications