For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிறையில் இரவு வெகுநேரம் தூங்காமல் யோசனையில் இருந்த ஜெயலலிதா

By Siva
Google Oneindia Tamil News

பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா சனிக்கிழமை இரவு வெகுநேரம் தூங்காமல் சிந்தனையில் இருந்தாராம்.

18 ஆண்டுகளாக நடந்து வந்த சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை தீர்ப்பளித்தது.

Jaya gets up at 5.30 am, goes for a walk

இதையடுத்து அவர்கள் 4 பேரும் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் இரவு வெகுநேரம் தூங்காமல் அவர் சிந்தனையில் இருந்துள்ளார். அதன் பிறகு தூங்கிய அவர் 3.30 மணிக்கெல்லாம் எழுந்து அறைக்குள் சிறிது நேரம் நடந்துள்ளார். காலை 6 மணிக்கு அவர் தனக்கு அளிக்கப்பட்ட 2 தமிழ் மற்றும் 3 ஆங்கில நாளிதழ்களை வெகுநேரமாக படித்துள்ளார்.

பின்னர் 7.30 மணிக்கு வெளியில் இருந்து வாங்கி வரப்பட்ட 3 இட்லி, சாம்பார், சட்னி சாப்பிட்டார். சிறையில் இன்று காலை வழங்கப்பட்ட புலாவை சசிகலா, இளவரசி ஆகியோர் சாப்பிட்டனர். சசியும், இளவரசியும் சாப்ட்வேர் என்ஜினியரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் சுபா என்பவர் உள்ள அறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஜெயலலிதாவை சந்திக்க அதிமுகவினர் மனு கொடுத்தாலும் அவர் யாரை சந்திக்க விரும்புகிறாரோ அவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிப்பதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

English summary
Jayalalithaa who spent the night in Parappana Agrahara prison got up at 3.30 in the morning and went for a walk.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X