For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோர்ட்டுக்குள் ஜெ., சசிகலா: மதியம் 1 மணிக்கு தீர்ப்பு! எம கண்டத்திற்கு முன்பு தீர்ப்பு வருமா?

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: ஜெயலலிதா கோர்ட்டுக்குள் சென்றுள்ள நிலையில் தீர்ப்பு விவரம் வெளியே வரும் வரை திக்.. திக் நிமிடங்களாக கழிகிறது அதிமுகவினருக்கு. இதனிடையே தீர்ப்பு 11.30 மணியளவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தீர்ப்பு நேரம் 1 மணிக்கு தள்ளிப்போகியுள்ளது.

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதியின் தீர்ப்பு காலை 11 மணிக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கோர்ட்டுக்குள் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சென்றுள்ள நிலையில், வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் வழக்கறிஞர்களை தவிர்த்து வேறு யாரையும் கோர்ட்டுக்குள் போலீசார் அனுமதிக்கவில்லை.

Jayalalitha verdict soon

பத்திரிகையாளர்கள் 500 மீட்டர் தொலைவிலேயே அமரச் செய்யப்பட்டுள்ளனர். செல்போன் ஜாமரும் இருப்பதால் கோர்ட்டுக்குள் உள்ள வட்டாரங்கள் மூலமாக வெளியே தகவல் கசிய வாய்ப்பில்லை.

அரசு வழக்கறிஞர் அல்லது ஜெயலலிதா வழக்கறிஞர் வெளியே வந்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிக்கும்போதுதான் தீர்ப்பின் விவரம் தெரியவரும். இந்நிலையில் 11.45 மணியளவில் கோர்ட் வளாகத்தில் இருந்து வெளியே வந்த ஜெயலலிதா வக்கீல் திவாகர் கூறுகையில், தீர்ப்பு 1 மணிக்கு தள்ளிப்போயுள்ளது என்றார்.

எனவே 1 மணிவரை திக்.. திக் நிமிடங்கள் தொடர உள்ளது. 1.30 மணிக்கு எம கண்டம் துவங்க உள்ளதால் அதற்குள்ளாக தீர்ப்பு வெளி வந்துவிட வேண்டும் என்று அதிமுகவினர் வேண்டிக்கொண்டுள்ளனர்.

English summary
Jayalalitha verdict will deliver within short time from now.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X