For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதாவை பார்த்து தான் அரசியலுக்கு வந்தேன்: நடிகை ரோஜா

By Siva
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: முதல்வர் ஜெயலலிதாவை பார்த்து அரசியலுக்கு வந்ததாக நடிகையும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வுமான ரோஜா தெரிவித்துள்ளார்.

ஆந்திராவில் பிறந்த ரோஜா செம்பருத்தி படம் மூலம் கோலிவுட் வந்தார். அவர் இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார்.

நடிப்பில் இருந்து அரசியலுக்கு சென்ற அவர் தற்போது ஆந்திர மாநிலம் நகரி தொகுதியின் எம்.எல்.ஏ. ஆவார். இந்நிலையில் அவர் தனது அரசியல் வாழ்வு பற்றி கூறுகையில்,

ரோஜா

ரோஜா

என் சொந்த பெயர் ஸ்ரீலதா. செம்பருத்தி படத்தில் நடிக்கையில் என் சிரிப்பு ரோஜா இதழ் விரித்தது போன்று இருப்பதாகக் கூறி இயக்குனர் செல்வமணி தான் என் பெயரை ரோஜா என்று மாற்றினார். தற்போது ரோஜா என்ற பெயர் தான் பிரபலமாகிவிட்டது.

நடிகை

நடிகை

நான் ஏர் ஹோஸ்டஸாக விரும்பினேன். என் பெற்றோர் என்னை டாக்டராக்கி பார்க்க ஆசைப்பட்டார்கள். இறுதியில் நான் நடிகையாகி தற்போது எம்.எல்.ஏ. ஆகியுள்ளேன்.

அண்ணன்

அண்ணன்

நான் இந்த அளவுக்கு உயர எனக்கு உதவியவர்கள் என் அண்ணன் குமாரசாமி ரெட்டி, எனது கணவர் செல்வமணி ஆகியோர் தான்.

அரசியல்

அரசியல்

என்னை அரசியலுக்கு அழைந்து வந்தவர் தற்போதைய சபாநாயகர் சிவபிரசாத் ராவ். என்னை பிரச்சாரம் செய்ய அழைத்த முதல் நபர் அவர் தான்.

ஜெயலலிதா

ஜெயலலிதா

நான் முதல்வர் ஜெயலலிதாவை பார்த்தே அரசியலுக்கு வந்தேன். அரிசயலில் எனக்கு மிகவும் பிடித்தவரும் அவர் தான். அவரின் துணிச்சல், தன்னம்பிக்கை யாருக்கும் வந்துவிடாது.

ஏழைகள்

ஏழைகள்

ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எப்பொழுதும் எனது தொகுதி மக்களுடன் இருக்க விரும்புகிறேன் என்றார்.

English summary
Actress turned politician Roja told that CM Jayalalithaa is her inspiration.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X