முஸ்லிம்களின் தொழுகை நேரம் ரத்து-அஸ்ஸாம் பாஜக அரசுக்கு கூட்டணி கட்சிகள் ஜேடியூ, எல்ஜேபி எதிர்ப்பு!
குவஹாத்தி: அஸ்ஸாம் சட்டசபையில் முஸ்லிம் எம்.எல்.ஏக்கள் தொழுகை நடத்துவதற்காக வெள்ளிக்கிழமை மட்டும் 3 மணிநேரம் வழங்கப்பட்ட அனுமதியை அம்மாநில பாஜக அரசு திடீரென ரத்து செய்துள்ளது. அஸ்ஸாமில் ஆளும் பாஜக அரசின் இந்த முடிவுக்கு அதன் கூட்டணிக் கட்சிகளான ஜேடியூ மற்றும் எல்ஜேபி ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அஸ்ஸாம் மாநிலத்தில் முஸ்லிம் எம்.எல்.ஏ.க்கள் வெள்ளிக்கிழமையன்று தொழுகை நடத்துவதற்கு 3 மணிநேரம் அனுமதி வழங்குவது நடைமுறையில் இருந்து வந்தது. இந்த நடைமுறை தற்போது நீக்கப்படுவதாக அஸ்ஸாம் பாஜக தமது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

பீகார் ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளம், அஸ்ஸாம் பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இதேபோல மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள மற்றொரு கட்சியான எல்ஜேபியும் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. பீகார் எதிர்க்கட்சியான ஆர்ஜேடியும் அஸ்ஸாம் பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறது.
இது தொடர்பாக பாஜகவின் கூட்டணி கட்சியான ஜேடியூவின் மூத்த தலைவர் நீரஜ் குமார் கூறுகையில், அஸ்ஸாம் அரசின் இந்த முடிவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இந்தியர் ஒவ்வொருவருக்கும் மத நம்பிக்கை, மரபுகளைப் பாதுகாக்கும் உரிமை இருக்கிறது என்றார். ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், வெறுப்பைப் பரப்புகிற நடவடிக்கைதான் இது. மோடி- அமித்ஷாவிடம் நல்ல பெயரை பெறுவதற்காக அஸ்ஸாம் முதல்வர் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வக்பு வாரிய மசோதா, பொது சிவில் சட்டம், குடியுரிமை சட்ட திருத்தம் என தொடர்ந்து வெறுப்பைத்தான் பாஜக தலைவர்கள் விதைத்து வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு அரணாக ஆர்ஜேடி கட்சி இருக்கும் என்றார். அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, நஞ்சைக் கக்கும் வகையில்தான் பேசுவதாக சமாஜ்வாதி கட்சி சாடியுள்ளது. அத்துடன் முஸ்லிம்களை சித்ரவதை செய்வதில் பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களுக்கு இடையே பெரிய போட்டி நிலவுகிறது என்றும் சமாஜ்வாதி கட்சி சாடியுள்ளது.
-
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications