ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமாரின் ஜேடியூ போட்டி- செம்ம கடுப்பில் பாஜக!
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் 11 இடங்களில் போட்டியிட இருப்பதாக பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) அறிவித்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ்- ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு வலுவான மாற்று கட்சியாக பாஜக இருக்கும் நிலையில் ஐக்கிய ஜனதா தளமும் அம்மாநிலத்தில் கால் பதிக்க முயற்சிப்பதை பாஜக தலைவர்களால் ஏற்க முடியவில்லையாம். ஆனாலும் மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு ஐக்கிய ஜனதா தளத்தின் ஆதரவு தேவை என்பதால் அக்கட்சித் தலைவர்கள் நிதிஷ்குமாரை விமர்சிக்க முடியாமல் தத்தளிப்பதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ளது. மொத்தம் 81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 41 இடங்கள்.

2019-ம் ஆண்டு ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 30 இடங்களிலும் பாஜக 26 , காங்கிரஸ் 16 தொகுதிகளிலும் வென்றன. இதனையடுத்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன. தற்போது முதல்வராக ஹேமந்த் சோரன் பதவி வகித்து வருகிறார்.
ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெறும் நிலையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ், லாலுவின் ஆர்ஜேடி மற்றும் இடதுசாரிகள் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளன. பாஜக தவிர தேசியவாத காங்கிரஸ், ஜார்க்கண்ட் மாணவர் யூனியன், ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா, மஜ்லிஸ் கட்சி உள்ளிட்டவையும் களத்தில் உள்ளன.
இந்த நிலையில் ஜார்க்கண்ட் அரசியலில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) வலுவாக கால் பதிக்க முடிவு செய்துள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 11 இடங்களில் போட்டியிடுவது என ஜேடியூ மு9டிவு செய்துள்ளது. ஜேடியூவின் தன்னிச்சையான இந்த முடிவை வெளிப்படையாக பாஜக வரவேற்பதாக தெரிவித்திருக்கிறது. ஆனால் ஜேடியூவால் 11 தொகுதிகளில் வெல்ல முடியாது என்பது கள நிலவரம் என்கிற போது எஞ்சிய தொகுதிகளில் போட்டியிட்டு ஆட்சியை எப்படி கைப்பற்ற முடியும்? என்கிற கோபத்தில் இருக்கிறதாம் பாஜக.
அதேநேரத்தில் மத்தியில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு ஜேடியூ ஆதரவு தேவை என்பதால் அக்கட்சியின் இந்த முடிவை வெளிப்படையாக விமர்சிக்கவும் முடியவில்லையாம். உள்ளே அழுது கொண்டே வெளியே சிரிக்கத்தான் முடிகிறது என்கிற விரக்தியைத்தான் ஜார்க்கண்ட் பாஜக தலைவர்கள் வெளிப்படுத்துகின்றனர் என்கின்றன ஊடக செய்திகள்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications