ஜார்க்கண்ட்டில் முதல் கட்ட வாக்குப் பதிவு நிறைவு.. ஆர்வமாக வாக்களித்த மக்கள்
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதற்கட்டமாக இன்று 43 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக தொடங்கியது. மதியம் 3 மணி நிலவரப்படி மொத்தம் 59 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது. இதற்கிடையே மாலை 5 மணியுடன் அங்கு வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.
ஜார்கண்ட்டில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் உள்ளார்.

இங்கு 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 13, நவம்பர் 20 என்று 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என்றும், அதன்பிறகு நவம்பர் 23ம் தேதி ரிசல்ட் வெளியாகும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் கூறியது.
ஜார்கண்ட்டை பொறுத்தவரை மொத்தம் 81 சட்டசபை தொகுதிகள் உள்ளது. இங்கு ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க 41 தொகுதிகளில் வெல்ல வேண்டும். இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
காங்கிரஸ் கூட்டணியில் முதல்வர் ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி, காங்கிரஸ், லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி, இடதுசாரிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதில் காங்கிரஸ் 30 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது. பாஜக கூட்டணியில் ஏஜேஎஸ்யூ, ஐஜத, எல்ஜேபி கட்சிகள் உள்ளன. பாஜக 62 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இத்தகைய சூழலில் தான் தேர்தல் ஆணையம் கூறியபடி இன்று முதற்கட்டமாக 43 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி நடைபெற உள்ளது. இதில் 17 தொகுதிகள் பொது தொகுதியாகும். 6 தொகுதிகள் எஸ்சி தொகுதியாகும். 20 தொகுதிகள் பழங்குடியினருக்கான தொகுதியாகும். இந்த தொகுதிகளில் காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. நக்சலைட்டு நடமாட்டம் உள்ள இடங்களில் மாலை 4 மணியுடன் ஓட்டுப்பதிவு என்பது நிறைவடைய உள்ளது. காலை 9 மணி நிலவரப்படி மொத்தம் 13.03 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது. காலை 11 மணி நிலவரப்படி 29 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது. மதியம் 1 மணி நிலவரப்படி மொத்தம் 46.25 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது.
இந்த 43 தொகுதிகளில் மொத்தம் 685 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸார், ராணுவ வீரர்கள், துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். ஜார்க்கண்டில் மொத்தம் 2.6 கோடி வேட்பாளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 1.31 கோடி பேர், பெண் வாக்காளர்கள் 1.29 கோடி பேர். 11.84 லட்சம் வாக்காளர்கள் முதல்முறையாக வாக்களிக்க உள்ளனர்.
வாக்குப்பதிவுக்காக 15,344 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுஉள்ளன. இவற்றில் 12,716 வாக்குச்சாவடிகள் கிராமப்பகுதியிலும், 2,628 வாக்குச்சாவடிகள் நகரப் பகுதியிலும் அமைக்கப்பட்டுள்ளன. 1,152 வாக்குச்சாவடிகளை முழுமையாக பெண்களே நிர்வகிப்பர் என்று மாநில தேர்தல் அதிகாரி கே.ரவிக்குமார் அறிவித்துள்ளார்.
இன்று முதற்கட்டமாக நடக்கும் தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இருந்து பாஜகவுக்கு தாவிய முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் செராய்கீழா தொகுதியில் போட்டியிடுகிறார். அதேபோல் 6 கேபினட் அமைச்சர்களும் களத்தில் உள்ளனர். அதன்பிறகு மீதமுள்ள தொகுதிகளுக்கு நவம்பர் 20ம் தேதி 2வது கட்டமாக தேர்தல் என்பது நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications