600கிமீ சைக்கிளில் சென்று மனைவியைத் தேடிய கணவன்.. 24 நாட்கள் போராட்டம்.. ஜார்கண்டில் அதிசயம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  600 கீ.மீ. சைக்கிளில் சென்று மனைவியை கண்டுபிடித்த கணவர்

  ஜார்கண்ட்: ஜார்கண்டை சேர்ந்த மனோகர் நாயக் என்ற 42 வயது நபர் காணாமல் போன தன் மனைவியை கடந்த 24 நாட்களாக தேடி இருக்கிறார். இதற்காகச் சைக்கிளில் மொத்தம் 600 கிமீ பயணம் செய்து இருக்கிறார்.

  அங்கு இருக்கும் 'முஸாபாணி பலிகோட' என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. மனோகர் நாயக் கூலித்தொழில் செய்து பிழைத்து வந்தவர்.

  இவரின் மனைவி கடந்த பிப்ரவரி 11ம் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அவர் கண்டுபிடிக்கப்பட்டது அதிசய சம்பவம் ஒன்றில் மூலம் ஆகும்.

  காணாமல் போனார்

  காணாமல் போனார்

  கடந்த ஜனவரி 14ம் தேதி பொங்கல் அன்று 'சங்கராந்தி' கொண்டாட அனிதா தன் அம்மா வீட்டிற்குச் சென்று உள்ளார். அங்குச் சென்றவர் இரண்டு நாட்கள் பின் திரும்பி வரும் வழியில் காணாமல் போய் உள்ளார். அவருக்கு அவ்வப்போது மனநிலையில் பிரச்சனை ஏற்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

  ஆரம்பித்தார்

  ஆரம்பித்தார்

  இந்த நிலையில் அவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். ஆனால் போலீசையும் நம்ப முடியாமல் தன்னுடைய சைக்கிளை எடுத்து மனைவியை தேடி கிளம்பி இருக்கிறார். எல்லோரிடமும் போட்டோ காட்டி பார்த்து இருக்கிறீர்களா? என்று கேட்டு இருக்கிறார்.

  எல்லா இடமும்

  எல்லா இடமும்

  இந்த நிலையில் கடந்த 24 நாட்களில் மட்டும் அவர் 600கிமீ சைக்கிளில் சென்று உள்ளார். மேற்கு வங்கத்தில் இருக்கும் எல்லாக் கிராமங்களுக்கும் சென்றுள்ளார். அதேபோல் அங்கு இருக்கும் எல்லாச் சிறிய பத்திரிக்கையிலும் மனைவி குறித்து விளம்பரம் கொடுத்து இருக்கிறார்.

  போலீசுக்குத் தகவல்

  போலீசுக்குத் தகவல்

  இந்த நிலையில் அனிதாவை பார்த்ததாக காரக்பூர் போலீஸ் நிலையத்தில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அவர் அங்கு எதோ தெருவில் சுற்றி இருக்கிறார். அங்கு இருந்து அந்தப் பெண்ணின் புகைப்படம் முஸாபாணி பலிகோட காவல் நிலையத்திற்கு அளிக்கப்பட்டது. உடனே போலீஸ் இந்தத் தகவலை மனோகருக்கு வாட்ஸ் ஆப்பில் அளித்துள்ளது.

  காதல்

  காதல்

  ஆனால் அவர் போலீஸ் சென்று மீட்கும் வரை காத்திருக்கவில்லை. உடனே அதே சைக்கிளில் அந்தக் கிராமத்திற்கு சென்று இருக்கிறார். மனைவியை அவரே மீட்டு வந்துள்ளார். அனிதாவை தற்போது மருத்துவமனையில் அனுமதித்து இருக்கிறார்.

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Jharkhand man named Manohar Nayak from Musabani's Baligoda village, cycles 600km to find his missing wife for 24 days. Finally he found his wife in Kharagpur streets.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற