ஜார்க்கண்ட் சுரங்க முறைகேடு வழக்கு: முதல்வர் ஹேமந்த் சோரன் உதவியாளர் பிரேம் பிரகாஷ் கைது
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுரங்க முறைகேடு வழக்கில் முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளர் பிரேம் பிரகாஷ் இன்று அதிரடியாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். முன்னதாக நேற்று பிரேம் பிரகாஷ் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்டவைகள் சிக்கின.
2021-ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன், சுரங்க ஒதுக்கீடு பெற்றார். முதல்வர் எனும் அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி சுரங்க உரிமம் பெற்றார் ஹேமந்த் சோரன் என்பது பாஜகவின் குற்றச்சாட்டு. இது உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-க்கு எதிராக முதல்வர் ஹேமந்த் சோரன் செயல்பட்டிருப்பதாக கூறி தேர்தல் ஆணையத்திலும் பாஜக புகார் செய்துள்ளது.

அதேநேரத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் கூட்டணி அரசை கவிழ்ப்பதிலும் பாஜக தீவிரம் காட்டுவதாக கூறப்படுகிறது ஆளும் ஜே.எம்.எம், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 5 பேரை பாஜக வளைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
ஜார்க்கண்ட் சட்டசபையில் ஜேஎம்எம் 30; காங்கிரஸ் 18; ஆர்ஜேடி, இடதுசாரிகள் 2 ; பாஜக கூட்டணிக்கு 31 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதனால் ஆளும் கூட்டணி எம்.எல்.ஏக்களை வளைப்பதில் பாஜக தீவிரம் காட்டுகிறது.
இப்பின்னணியில் சுரங்க முறைகேடு விவகாரத்தில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். ஜார்க்கண்ட், தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்களில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று அமலாக்க பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ஹேமந்த் சோரனின் உதவியாளர் பிரேம் பிரகாஷ் வீடும் அடங்கும்.
ஹேமந்த் சோரன் உதவியாளர் பிரேம் பிரகாஷ் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் அலமாரி ஒன்றில் 2 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் இருந்தது கண்டு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த 2 துப்பாக்கிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அத்துடன் இது தொடர்பாக தனியாக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பிரேம் பிரகாஷ் வீட்டில் பாதுகாப்புக்காக இருந்த போலீசாரின் துப்பாக்கிகளே இவை என ராஞ்சி போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். மேலும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த 2 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஹேமந்த் சோரன் உதவியாளர் பிரேம் பிரகாஷ், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications