ஜார்கண்டில் பயங்கரம்.. தப்பிச் செல்ல முயற்சித்த 5 கைதிகள் சுட்டுக் கொலை- 12 பேர் தலைமறைவு
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் தப்பிச் செல்ல முயன்ற 17 கைதிகளில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மீதமுள்ள 12 கைதிகள் தப்பி விட்டதாக அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஜார்கண்ட் மாநில சட்டசபைத் தேர்தல் 3வது கட்டமாக இன்று நடைபெற்றது. வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் அபாயம் இருப்பதால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

இந்நிலையில், ஜார்கண்டின் தெற்குப் பகுதியில் உள்ள சாய்பாசாவில் உள்ள சிறைக் கைதிகள் விசாரணைக்காக நீதிமன்றம் அழைத்துச் செல்லப்பட்டனர். விசாரணை முடிந்து மீண்டும் சிறை திரும்பும் வழியில் போலீசாரின் வண்டியில் இருந்து 17 கைதிகள் தப்பிக்க முயற்சித்ததாகக் கூறப்படுகிறது.
தப்பிக்க முயன்ற கைதிகள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 கைதிகள் உயிரிழந்தனர். மீதமுள்ள 12 கைதிகள் தப்பிச் சென்று விட்டதாக ஜார்கண்ட் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், தலைமறைவான கைதிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications