ஒருதலை காதல்: பி.எட். மாணவி தலை சிதைத்து, கை துண்டிக்கப்பட்டு கொலை
ராஞ்சி: ஜார்க்கண்டில் 30 வயது பி.எட். மாணவி தலை நசுங்கி, ஒரு கை வெட்டப்பட்ட நிலையில் கல்லூரிக்கு வெளியே பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கார் மாவட்டத்தை சேர்ந்தவர் சோனாலி மர்மு(30). அப்பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.எட். படித்து வந்தார். அவரது கணவர் சித்ரஞ்சன் துடு. சோனாலியை அதே ஊரை சேர்ந்த சுகேன் மண்டல்(35) என்பவர் பள்ளிக் காலத்தில் இருந்து ஒருதலையாக காதலித்து வந்ததுடன் அவரை பின்தொடர்ந்தும் உள்ளார்.
இந்நிலையில் புதன்கிழமை கல்லூரிக்கு வெளியே தலை நசுங்கிய நிலையில் ஒரு கை வெட்டப்பட்டு சோனாலி பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மண்டல் கூர்மையான ஆயுதத்தால் சோனாலியின் தலையில் 20 முறை தாக்கியுள்ளார்.
இந்த கொடூர சம்பவத்தை செய்துவிட்டு அவர் தலைமறைவாகிவிட்டார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மண்டலை தேடி வருகிறார்கள்.
இது பற்றி சோனாலியின் கணவர் கூறுகையில்,
நான் தான் என் மனைவியை தினமும் பைக்கில் கல்லூரிக்கு அழைத்துச் செல்வேன். மண்டல் எங்கள் திருமணத்தின்போது எங்களை மிரட்டினார். நான் சோனாலியின் செல்போன் எண்ணை மாற்றினேன். அப்படியும் அந்த ஆள்விடவில்லை. அவர் தண்டிக்கப்படுவார் என்று நம்புகிறேன் என்றார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் கேரளாவில் 30 வயது சட்டக் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications