For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜூனியருக்கு சுப்ரீம் கோர்ட், எனக்கு சென்னை ஹைகோர்ட்டா: புரமோஷனை ஏற்க மறுத்த ஜட்ஜைய்யா

By Siva
Google Oneindia Tamil News

பெங்களூரு: தனது ஜூனியருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு கிடைத்த ஏமாற்றத்தில் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பை ஏற்க மறுத்துள்ளார்.

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி வருபவர் நீதிபதி ஹெச்.ஜி. ரமேஷ். அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது.

Judge refuses to head Chennai high court

என் ஜூனியருக்கு உச்ச நீதிமன்றத்தில் பணியாற்ற புரமோஷன் கிடைத்துள்ளது, எனக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பு வேண்டாம் என்று ரமேஷ் தெரிவித்துள்ளார். தன் ஜூனியருக்கு தனக்கு முன்பே பதவி உயர்வு கிடைத்த ஏமாற்றத்தில் அவர் இவ்வாறு செய்துள்ளார்.

இது குறித்து ரமேஷ் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜேஎஸ் கேகருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு மதம் அல்லது சாதியின் அடிப்படையில் நீதிபதிகளை நியமிக்க நம் அரசியல் சாசனத்தில் வழிவகை இல்லை.

அப்படி இருக்கும்போது என் ஜூனியர் அப்துல் நசீருக்கு சிறுபான்மையினர் பிரிவில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு அளித்திருப்பது சரி அல்ல என்று தெரிவித்துள்ளார்.

English summary
Disappointed with his junior getting promoted as apex court judge, a judge in Karnataka high court refuses to head the Chennai high court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X