நீதிபதிகள் பெயரால் லஞ்சம்.. சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதிகள் பெயரை சொல்லி லஞ்சம் பெற்ற வழக்கை சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) விசாரிக்க அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறிவிட்டது.

லக்னோவிலுள்ள மருத்துவ கல்லூரியை, அரசு கருப்பு பட்டியலில் சேர்த்தது. இதை எதிர்த்து கல்லூரி நிர்வாகம் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வர வேண்டும் என்ற நோக்கத்தில் நீதிபதிகளுக்கு லஞ்சம் கொடுக்க கல்லூரி நிர்வாகம் முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

சிபிஐ விசாரணை

சிபிஐ விசாரணை

இதில் பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனும் ஒரு மனுதாரராக இணைந்துள்ளார். சிபிஐ இதை விசாரித்து வருகிறது. அப்போது, லக்னோவில் செயல்பட்டு வந்த ஒரு மருத்துவக்கல்லூரி தொடர்பான வழக்கில் ஒடிசா ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி இஷ்ரத் மஸ்ரூர் குட்டூசி லஞ்சம் வாங்கியதாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது சுட்டிக்காட்டப்பட்டது. இது தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வக்கீல்கள் கோரிக்கை விடுத்தனர்.

தலைமை நீதிபதி அறிவிப்பு

தலைமை நீதிபதி அறிவிப்பு

நீதிபதிகள் செல்லமேஸ்வர் மற்றும் அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், கடந்த நவம்பர் 9ம் தேதி விசாரணை நடத்தியபோது, 5 சீனியர் நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன பெஞ்ச்சுக்கு இந்த வழக்கை மாற்றியது. ஆனால் நவம்பர் 10ம்தேதி, தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா இதில் தலையிட்டு, எந்த நீதிபதியும் தனிப்பட்ட முறையில் இந்த விஷயத்தை கையில் எடுக்க முடியாது. தலைமை நீதிபதிதான் நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் உள்ளவர் என்று கூறினார்.

குற்றம் சொல்ல கூடாது

குற்றம் சொல்ல கூடாது

இதையடுத்து நீதிபதிகள் ஆர்.கே.அகர்வால், அருண் மிஷ்ரா மற்றும் கன்வில்கர் ஆகிய 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறுகையில், எல்லோரும் உச்சநீதிமன்ற மாண்பு மீது சந்தேகம் கிளப்புகிறார்கள். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எழக்கூடாது. ஏனெனில் சிபிஐ தனது முதல் தகவல் அறிக்கையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பெயரை குறிப்பிடவேயில்லை. எனவே தலைமை நீதிபதிக்கு எதிராக தேவையற்ற கருத்துக்களை கூறக் கூடாது என்று தெரிவித்தது.

இன்று தீர்ப்பு

இன்று தீர்ப்பு

பிரசாந்த் பூஷன் வாதிடுகையில், இந்த மனு தலைமை நீதிபதிக்கு எதிரானது என்ற தப்பான பிம்பம் ஏற்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்தார். இதனிடையே இவ்வழக்கில் இன்று தீர்ப்பை அறிவிக்க உள்ளதாக 3 நீதிபதிகள் பெஞ்ச் அறிவித்திருந்தது. அதன்படி மாலையில் தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம். அப்போது வழக்கறிஞர் காமினி ஜெய்ஸ்வாலின் கோரிக்கையான சிறப்பு புலனாய்வு குழுவை கொண்டு இந்த விவகாரத்தை விசாரிக்க வேண்டும் என்பதை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. மேலும், நாங்கள் எல்லோரும் சட்டத்திற்கு மேற்பட்டவர்கள் கிடையாது. அதேநேரம், நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். நீதிபதி மீது நீதிமன்ற உத்தரவை கொண்டு எப்.ஐ.ஆர் பதிவு செய்ய முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்தது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A three-judge bench of the Supreme Court warns Loose Talk Against Chief Justice Is Damaging.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற