இந்தியாவின் மாபெரும் அரசியல் கருத்துக் கணிப்பு.. நீங்கள் பங்கேற்றீர்களா?
 • search

தீர்ப்பை சாதகமாக பெற நீதிபதிகள் பெயரால் லஞ்சம்.. உச்சநீதிமன்ற 3 நீதிபதிகள் அமர்வு இன்று விசாரணை

By Veera Kumar
FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

  டெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதிகள் பெயரை சொல்லி லஞ்சம் பெற்ற வழக்கை இன்று 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்க உள்ளது.

  லக்னோவிலுள்ள மருத்துவ கல்லூரியை, அரசு கருப்பு பட்டியலில் சேர்த்தது. இதை எதிர்த்து கல்லூரி நிர்வாகம் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

  Judges bribery case: 3 judge Supreme Court bench likely to hear plea today

  தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வர வேண்டும் என்ற நோக்கத்தில் நீதிபதிகளுக்கு லஞ்சம் கொடுக்க கல்லூரி நிர்வாகம் முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

  அப்போது, லக்னோவில் செயல்பட்டு வந்த ஒரு மருத்துவக்கல்லூரி தொடர்பான வழக்கில் ஒடிசா ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி இஷ்ரத் மஸ்ரூர் குட்டூசி லஞ்சம் வாங்கியதாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது சுட்டிக்காட்டப்பட்டது. இது தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வக்கீல்கள் கோரிக்கை விடுத்தனர்.

  நீதிபதிகள் செல்லமேஸ்வர் மற்றும் அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், கடந்த நவம்பர் 9ம் தேதி விசாரணை நடத்தியபோது, 5 சீனியர் நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன பெஞ்ச்சுக்கு இந்த வழக்கை மாற்றியது. ஆனால் நவம்பர் 10ம்தேதி, தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா இதில் தலையிட்டு, எந்த நீதிபதியும் தனிப்பட்ட முறையில் இந்த விஷயத்தை கையில் எடுக்க முடியாது. தலைமை நீதிபதிதான் நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் உள்ளவர் என்று கூறினார்.

  இதையடுத்து நீதிபதிகள் ஆர்.கே.அகர்வால், அருண் மிஷ்ரா மற்றும் கன்வில்கர் ஆகிய 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.

  வரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்! - பதிவு இலவசம்!

  English summary
  A three-judge bench of the Supreme Court is likely to hear today a plea claiming that alleged bribes were taken using the names of apex court judges promising to secure favourable settlement of a case.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more