Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிச்சயதார்த்தத்துக்கு முன்.. மணமகளின் தந்தையை இழுத்து கொண்டு ஓடிய மணமகனின் தாய்.. பெரிய ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: இளம்ஜோடியின் நிச்சயதார்த்தத்துக்கு முன்பாகவே மணமகனின் தாயை இழுத்து கொண்டு மணப்பெண்ணின் தந்தை ஓட்டம் பிடித்த சம்பவம் பேசும் பொருளாகி உள்ளது. தற்போது அவர்கள் 2 பேரும் சேர்ந்து வாழ்கின்றனர். மாறாக அவர்களின் மகன் - மகளின் திருமண நிச்சயதார்த்தம் நின்றுப்போய் உள்ளது. என்ன நடந்தது? இருவருக்கும் காதல் மலர்ந்தது எப்படி? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

‛வீட்டை கட்டிப்பார்.. திருமணம் செய்து பார்' என்று முன்னோர்கள் சொல்லி உள்ளனர். இதன் பின்னணியில் பெரிய அர்த்தம் உள்ளது. வீடு கட்டும்போதும், திருமண ஏற்பாடு மேற்கொள்ளும்போதும் பல தடைகள் வரும். இதனால் தான் முன்னோர்கள் இப்படி சொல்லி உள்ளனர்.

engagement marriage

திருமணத்தை எடுத்து கொண்டால் மாப்பிள்ளைக்கு, பெண் பிடிக்க வேண்டும். பெண்ணுக்கு, மாப்பிள்ளை பிடிக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக இருவரின் வீட்டிலும் உள்ள நிதி நிலைமை ஒருவருக்கொருவர் நிகராக இருக்க வேண்டும்.

இதுதவிர ஜாதகத்தில் நம்பிக்கை இருந்தால் அந்த பொருத்தமும் சரியாக இருக்க வேண்டும். அப்படி என்றால் மட்டுமே திருமணம் நடக்கும். அதுமட்டுமின்றி மாப்பிள்ளையை பற்றி மற்றவர்களும், பெண்ணை பற்றி மற்றவர்களும் பொய்யான தகவல்களை பரப்பி திருமணத்தை நிறுத்தும் சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. இது போதாது என்று தனது காதலன், காதலியும் கடைசி நேரத்தில் மணப்பெண், மணமகன் எஸ்கேப்பாகும் சம்பவங்களும் ஒன்று, இரண்டு நடந்து வருகிறது. இதனால் தான் ஒரு திருமணத்தை முடிப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும்.

இப்படியான சூழலில் தான் தற்போது மத்திய பிரதேசத்தில் ஒரு விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது இளம்பெண்ணுக்கும், இளைஞர் ஒருவருக்கும் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. இருவருக்கும் ஜாதகம் பொருந்தியது. மணமகன், மணகள் ஆகியோருக்கும் பிடித்து போனது. இதனால் நிச்சயதார்த்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் நிச்சயதார்த்தத்துக்கு முன்பாகவே மணமகளின் தந்தை, மணமகனின் தாயை இழுத்து கொண்டு எஸ்கேப் ஆகி உள்ளார். இதனால் திருமணம் தடைப்பட்டது.

இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் நகரில் உள்ள உன்ட்வாசா கிராமத்தில் நடந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் 45 வயது பெண். இவருக்கு கணவர் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தான் அவரது மகனுக்கும், பக்கத்து கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் திருமணம் முடிவு செய்யப்பட்டது.

இதில் மணப்பெண்ணுக்கு தாய் இல்லை. அவர் இறந்துபோய் விட்டார். அந்த மணப்பெண் தனது தந்தை மற்றும் சகோதரியுடன் வாழ்ந்து வருகிறார். இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமண ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டது. திருமண நிச்சயதார்த்த விழாவுக்கான பணிகளை இருகுடும்பத்தினரும் மேற்கொண்டனர்.

அப்போது தான் திடீரென்று மணமகனின் தாயான 45 வயது பெண் மாயமானார். அவரை பல இடங்களில் குடும்பத்தினர் தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுந்த மணமகன் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. தனது தாயை காணவில்லை. கண்டுபிடித்து தரும்படி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணையை தொடங்கினர்.

அப்போது சிக்லி என்ற கிராமத்தில் அந்த பெண் மீட்கப்பட்டார். அங்கு அவர் 50 வயது நிரம்பிய விவசாயியுடன் தனியாக வசித்து வந்தார். அவர் யார் என்றால் அந்த பெண்ணின் மகனுக்கு பார்த்த மணப்பெண்ணின் தந்தை ஆவார். அதாவது சம்பந்தி ஆக வேண்டிய இருவரும் காதலித்து ஓட்டம் பிடித்தது தெரியவந்தது. திருமண பேச்சுவார்த்தையின்போது மணமகளின் தந்தையின் பேச்சு, நடத்தையில் ஈர்க்கப்பட்ட அந்த மணமகனின் தாய் அவரை திருமணம் செய்து கொண்டு வாழ முடிவு செய்து எஸ்கேப்பானது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது மணமகனின் தாய் நான் எனது காதலனுடன் (மணப்பெண்ணின் தந்தை) தான் செல்வேன். அவரை விட்டு என்னால் பிரிந்து வாழ முடியாது என்று உறுதியாக சொன்னார். இருவரும் மேஜர் என்பதால் போலீசாரால் எதுவும் செய்ய முடியவில்லை. இதனால் அந்த 45 வயது பெண் தனது மகனுக்கு பார்த்த மணப்பெண்ணின் தந்தையுடன் சென்றார்.

இப்படி அவர்கள் 2 பேரும் ஒன்றாக சேர்ந்த நிலையில் திருமணத்தை எதிர்நோக்கி காத்திருந்த ஜோடிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நின்று போனது. இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் பேசும்பொருளாாகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+