சிறை தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நீதிபதி கர்ணன் சீராய்வு மனுத்தாக்கல்!!
சிறைத் தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நீதிபதி கர்ணன் சீராய்வு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
கொல்கத்தா: உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள கர்ணனுக்கு உச்சநீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேற்று முன்தினம் 6 மாதம் சிறை தண்டனை விதித்தது. இந்நிலையில் இதனை எதிர்த்து நீதிபதி கர்ணன் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது ஊழல் புகார் தெரிவித்து பிரதமர் மோடிக்கு கடந்த ஜனவரி மாதம் கர்ணன் கடிதம் ஒன்றை எழுதினார். இதையடுத்து வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்றம் கர்ணனுக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாத சிறை தண்டனை விதித்தது.

இதையடுத்து அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அவரை கைது செய்வதற்காக கொல்கத்தா போலீசார் சென்னைக்கு வந்துள்ளனர்.
இந்நிலையில் 6 மாத சிறை தண்டனையை மறுபரிசீலனை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் நீதிபதி கர்ணன் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய அவரது வழக்கறிஞர் நீதிபதி கர்ணன் எங்கும் தப்பி ஓடவில்லை என கூறியுள்ளார்.
மேலும் அவர் சென்னையில் தான் உள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார். கர்ணனுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்திருப்பது அடிப்படை உரிமைக்கு எதிரானது என்றும் கர்ணனின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications