For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிராமணர்கள் யார்? அவர்களின் குணம் இதுதான்.. மதவாதிகளாக இருந்ததில்லை.. நீதிபதி வி.சிதம்பரேஸ் பேச்சு

Google Oneindia Tamil News

கொச்சி: பிராமணர்கள் எப்போதும் மதவாதிகளாக இருந்ததில்லை என்றும் அவர்கள் பிறருக்கு கேடு விளைவிக்காத அஹிம்சைவாதிகள் என்றும் கேரள மாநில உயர்நீதிமன்ற நீதிபதி வி.சிதம்பரேஸ் பேசியுள்ளார்.

தமிழ் பிராமணர்களின் கூட்டம் கொச்சியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கேரள உயர்நீதிமன்ற நீதிபதி வி.சிதம்பரேஸ் பங்கேற்றார்.

இந்த கூட்டத்தில் நீதிபதி வி.சிதம்பரேஸ் பேசியுள்ளதாவது:

குவியும் வடமாநிலத்தவர் ..வேல்முருகன் கேட்பது பயங்கரமாக இருக்கே.. முதல்வருக்கு முக்கிய வேண்டுகோள்

குவியும் வடமாநிலத்தவர் ..வேல்முருகன் கேட்பது பயங்கரமாக இருக்கே.. முதல்வருக்கு முக்கிய வேண்டுகோள் குவியும் வடமாநிலத்தவர் ..வேல்முருகன் கேட்பது பயங்கரமாக இருக்கே.. முதல்வருக்கு முக்கிய வேண்டுகோள்

கர்நாடக சங்கீதம்

"பிராமணர்கள் என்பவர்கள் முற்பிறவிகளில் செய்த நல்வினைகள் காரணமாக இரு முறை பிறந்தவர்கள். தூய்மை, உயர்ந்த சிந்தனை, நல்ல குணம், சைவ உணவுப் பழக்கம், கர்நாடக சங்கீதம் மீதான ஆர்வம் போன்ற தனித்துவம் மிக்க குணாதிசயங்கள் பிராமணர்களுக்கு உண்டு

அஹிம்சாவாதிகள்

அஹிம்சாவாதிகள்

பிராமணர்கள் எப்போதும் மதவாதிகளாக இருந்ததில்லை, மக்களை நேசிப்பவர்கள், பிறருக்கு கேடு விளைவிக்காதவர்கள், அஹிம்சாவாதிகளாக இருப்பார்கள். நல்ல காரியங்களுக்கு பொருளுதவி செய்யும் பிராமணர்கள் எப்போதும் உயர்பொறுப்பில் இருக்க வேண்டும்

சமூகம் சிந்திக்க வேண்டும்

சமூகம் சிந்திக்க வேண்டும்

அரசமைப்புச் சட்டப் பொறுப்பில் இருப்பதால் நான் இட ஒதுக்கீடு பற்றி கருத்துக்கூற இயலாது. ஆனால், சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு தொடரவேண்டுமா? பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வேண்டுமா என்பதை இந்த சமூகம்தான் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.

பிராமண ஏழைக்கு இடஒதுக்கீடு

பிராமண ஏழைக்கு இடஒதுக்கீடு

ஒரு பிராமண சமையல்காரரின் மகன் பொருளாதாரத்தில் பின் தங்கியவராக இருந்தாலும் அவருக்கு இடஒதுக்கீடு கிடைக்காது. ஆனால் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஏழை வியாபாரியின் மகனுக்கு இடஒதுக்கீடு கிடைக்கிறது.

ஓரம்கட்ட அனுமதிக்க கூடாது

ஓரம்கட்ட அனுமதிக்க கூடாது

குரல் உயர்த்திப் பேசவேண்டும். அழுகிற குழந்தைதான் பால்குடிக்கும். நம்மை ஓரம்கட்ட அனுமதிக்கக்கூடாது; நாம் எப்போதுமே மைய நீராட்டத்தில் இருக்க வேண்டும்; தனிக் குரலில் பாடாமல் சேர்ந்து இசைக்க வேண்டிய காலம் வந்துவிட்டது" இவ்வாறு கூறியுள்ளார்

English summary
Justice V Chitambaresh listed out the qualities and the virtues of being a brahmin at tamil brahmins meet at cochin
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X