2 "மதம்.." கல்லூரி காதலுக்கு குறுக்கே வந்த இந்துத்துவா அமைப்பினர்.. பதற்றத்தில் கர்நாடக மாவட்டம்
பெங்களூர்: கர்நாடகாவில் உள்ள தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள பியூ கல்லூரியில் இருவேறு மதத்தை சேர்ந்த மாணவியும், மாணவனும் எச்சரிக்கையையும் மீறி கடிதம் மூலம் காதலித்த நிலையில் மோதல் போக்கு ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் காதலுக்கு உதவிய மாணவிகள் உள்பட மொத்தம் 18 பேர் மீது கல்லூரி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
கர்நாடகா.. நமது அண்டைமாநிலமான இது சமீபகாலமாக மதசார்ந்த பிரச்சனைகளில் சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. இந்த ஆண்டின் துவக்கத்தில் ஹிஜாப் தொடர்பான பிரச்சனை கல்லூரிகளில் வெடித்தது.
இது தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுத்தது. கோவில்களில் முஸ்லிம் வியாபாரிகள் கடை அமைக்க தடை, ஹலால் உணவு விற்பனைக்கு தடை என தொடர்ந்து பல விரும்பதகாத சம்பவங்கள் நடந்தன.

தட்சிண கன்னடாவில் பிரச்சனை
கடந்த சில மாதங்களாக பெரிய அளவுக்கு பிரச்சனைகள் இல்லாமல் இருந்தாலும் கூட ஹிஜாப் பிரச்சனை வெடிக்க காரணமாக இருந்த கடலோர மாவட்டமான உடுப்பி அருகே உள்ள தட்சிண கன்னடாவில் மட்டும் அவ்வப்போது சில சம்பவங்கள் நடந்து விடுகின்றன. அந்த வகையில் தான் தற்போது இன்னொரு பிரச்சனை நடந்துள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:

கல்லூரியில் முளைத்த காதல்
தட்சிண கன்னடா மாவட்டம் விட்டாலா பகுதியில் பியூ கல்லூரி உள்ளது. முதல்வராக ஆதர்ஷா ராய் உள்ளார். இந்த கல்லூரியில் பல மதங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் ஒன்றாக படித்து வருகின்றனர். இந்நிலையில் தான் இருவேறு மதத்தை சேர்ந்த மாணவியும், மாணவனும் நெருக்கமாக பழகியதாக கூறப்படுகிறது. மேலும் இருவரும் காதலித்ததாக கூறப்படுகிறது.

கிளம்பிய எதிர்ப்பு
இதற்கு சில மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு இந்துத்துவ அமைப்புகளுடன் சேர்ந்து மாணவனுடன் பழக கூடாது என மாணவிக்கு கட்டுப்பாடு விதித்துள்ளனர். இந்த விவகாரம் கல்லூரி முதல்வர் ஆதர்ஷா ராயின் கவனத்துக்கு சென்றது. இதையடுத்து மாணவி மற்றும் மாணவியின் பெற்றோரை நேரில் அழைத்து சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது. மேலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த சம்பவம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடந்தது.

பேக்கில் இருந்த காதல் கடிதம்
இந்நிலையில் தான் கடந்த திங்கட்கிழமை கல்லூரியில் நடந்த சோதனையின்போது மாணவியின் பேக்கில் காதல் கடிதம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கடிதம் பதற்றத்தை ஏற்படுத்தியது. அதாவது சில மாணவர்கள், மாணவியின் காதலனை பார்த்து எச்சரிக்கை விடுத்தனர். இந்த விவகாரம் கல்லூரி முழுவதும் பரவிய நிலையில் மாணவர்கள் இருபிரிவாக பிரிந்து மோதிக்கொள்ளும் சூழல் ஏற்பட்டது.

சஸ்பெண்ட் நடவடிக்கை
இதை சுதாரித்து கொண்ட கல்லூரி நிர்வாகம் உடனடியாக மாணவி, மாணவனின் பெற்றோரை மீண்டும் வரவழைத்து சம்பவம் குறித்து தெரிவித்து இருவரையும் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விவகாரத்தில் சில அதிரடியான நடவடிக்கைகளை கல்லூரி நிர்வாகம் எடுத்தது. இதுபற்றி கல்லூரி முதல்வர் ஆதர்ஷ் ராய் கூறுகையில், ‛‛காதல் விவகாரத்தில் தொடர்புடைய மாணவியை தேர்வுக்கு மட்டும் வரும்படி கூறியுள்ளோம். மாறாக பிரச்சனையை உருவாக்கிய மாணவ-மாணவிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட அனைவரும் 2023 மார்ச் மாதம் நடக்கும் தேர்வுக்கு மட்டும் வரும்படி கூறியுள்ளோம்'' என்றார்.

18 பேர் மீது நடவடிக்கை
அதன்படி கல்லூரியில் இருந்து மொத்தம் 18 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதில் கல்லூரி வளாகத்தில் பதற்றத்தை உருவாக்கிய 14 மாணவர்களும், காதல் ஜோடிக்கு உதவி செய்த விவகாரத்தில் சிக்கிய 4 மாணவிகளும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 2ம் ஆண்டு சயின்ஸ் பாடப்பிரிவில் படித்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் இன்னும் உஷாராக செயல்பட்டு வருகிறது. மாணவ-மாணவிகளின் நடவடிக்கைகளை கல்லூரி நிர்வாகம் தீவிரமாக கண்காணித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications