For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாட்டை காத்தேன்.. மகனை விட்டுட்டேன்.. கார்கில் போர் 'ஹீரோ' கண்ணீர் - கதறும் குடும்பம்

Google Oneindia Tamil News

கான்பூர்: கொரோனாவால் இறந்த தன் மகனின் முகத்தை கடைசியாக ஒருமுறை பார்க்க ஒரு ராணுவ மேஜரின் குடும்பம் பட்டபாடு கண் கலங்க வைக்கிறது.

இந்தியாவில் கொரோனா 2வது அலை உச்சத்தில் உள்ளது. எங்கு திரும்பினாலும், எங்கு சென்றாலும் கொரோனா மட்டுமே. வைரஸ் பாதிப்பால்,தினம் ஆயிரக்கணக்கானோர் செத்து மடிகின்றனர்.

எக்ஸிட்போல் ரிசல்ட் எல்லாம் பார்த்தா 11.05 க்கு மணல் அள்ளிரலாம்லடா.. வைரல் மீம்ஸ்கள்

உயிரைக் காப்பாற்றும் ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. அதேபோல், காலில் விழுந்தால் கூட ரெமிடிசிவிர் மருந்து கிடைக்காத அவல நிலை உள்ளது. மக்களின் உயிர் துச்சமாகிக் கொண்டிருக்கும் காலக்கட்டம் இது.

 உயிரிழந்த மகன்

உயிரிழந்த மகன்

இந்த நிலையில், இந்தியாவுக்காக கார்கில் போரில் பங்கேற்று வீரத்துடன் போரிட்ட ஓய்வுபெற்ற அதிகாரி மேஜர் ஹரி ராம் தூபே, கொரோனாவுக்கு தனது மகனை வாரி அள்ளிக்கொடுத்திருக்கிறார். தூபேவின் 31 வயது மகனுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட, அவரை கான்பூர் மருத்துவமனையில் அனுமதித்தினர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார்.

 காத்துக்கிடந்த குடும்பம்

காத்துக்கிடந்த குடும்பம்

இதில் கொடுமை என்னவெனில், கொரோனாவால் இறந்த மகனின் முகத்தை மருத்துவர்கள் காட்ட மறுத்துவிட்டனர். துபேவின் ஒட்டுமொத்த குடும்பமும் மருத்துவமனைக்கு வெளியே நின்று, கடைசியாக முகத்தை காண ஏங்கிக் கொண்டிருந்தது.

நாட்டை காத்தேன்

இதுகுறித்து கண்ணீருடன் இந்தியா டுடே நிறுவன ரிப்போர்ட்டரிடம் பேசிய தூபே, "நாட்டுக்காக நான் கார்கில் எல்லையில், பாகிஸ்தானை எதிர்த்து போரிட்டு நாட்டை பாதுகாத்தேன். ஆனால், இன்று மகனை பாதுகாக்க தவறிவிட்டேன். எனது மகனுக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படவில்லை. இப்போது உடலையும் கொடுக்க மறுக்கின்றனர்" என்றார் வேதனையாக.

 நன்றி சொன்ன குடும்பம்

நன்றி சொன்ன குடும்பம்

இதன்பிறகு, அந்த ரிப்போர்ட்டரின் தீவிர முயற்சியால், மருத்துவர்கள் இறந்த மகனின் உடலை குடும்பத்தினர் பார்க்க சம்மதித்தனர். கொரோனாவால் பாதித்து இருந்தவர் என்பதால், குடும்பத்தினர் அனைவருக்கும் பிபிஇ கிட் கொடுக்கப்பட்டு, பிறகு அவர்கள் அனைவரும், முகத்தை கண்டு துடித்த சம்பவம் காண்போரை கலங்கச் செய்தது. அதேசமயம், தேசத்துக்கு உழைத்த ராணுவ வீரருக்கு கடைசி நேரத்தில், இறந்த மகனின் முகத்தை காண கடும் முயற்சி செய்து ஏற்பாடு செய்த ரிப்போர்ட்டருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.

English summary
kargil hero hari ram lost his son due to corona - கொரோனா
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X