ரயில்வே லோகோ பைலட் வேலை எப்படி இருக்கும் தெரியுமா? பலரும் அறியாத ஆச்சர்ய தகவல்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியன் ரயில்வேயில் உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கு 11 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் பலரும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் காட்டுகின்றனர். எனினும் பலருக்கு இந்த லோகோ பைலட் பணி என்ன மாதிரி இருக்கும்? இரவு நேரங்களில் பின்பற்றப்படும் கடுமையான பாதுகாப்பு நடைமுறைகள் என்னென்ன என்பது குறித்த ஆச்சரியமூட்டும் தகவல்களை இங்கு காணலாம்.

இந்தியன் ரயில்வேயில் உதவி லோகோ பைலட் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 11 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. ரயில்வேயில் உதவி லோகோ பைலட் வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் பலருக்கும் அந்த வேலையின் தன்மை பற்றி தெரியாது. லோகோ பைலட்களின் பணிகள் என்ன? இரவில் அவர்களின் வேலை எந்த மாதிரியாக இருக்கும் என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

Indian Railways Loco Pilot What They Do During Night Shifts

திரும்பத் திரும்ப சொல்ல வேண்டும்

* ரயில்களில் இரவு பயணத்தின் போது, லோகோ பைலட்கள் பேசிக்கொண்டே இருக்க வேண்டும்.
* அதற்காக லோகோ பைலட்டும் உதவி பைலட்டும் பொதுவான விஷயங்களை பேசிக்கொண்டு இருப்பார்கள் என நினைக்க வேண்டாம்.

* ஒவ்வொரு சிக்னலும் வருவதற்கு முன்பாக லோகோ பைலட் சத்தமாக அதை சொல்ல, மற்றொரு லோகோ பைலட் அதை உறுதி செய்ய வேண்டும்.
* நம்பர், கலர், எச்சரிக்கை - "பேச்சு, கேட்கப்பட்டது, உறுதி செய்யப்பட்டது, திரும்பி சொல்லவும்" என்ற வார்த்தைகள்தான். நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர்கள் இரவில் திரும்பத் திரும்ப சொல்ல வேண்டியிருக்கும்.

ஒவ்வொரு 500 மீட்டர் தூரத்துக்கும்

இது குறித்து ரயில்வேயில் ஓய்வு பெற்ற லோகோ பைலட்கள் சிலர் கூறுகையில், "ஒவ்வொரு சிக்னலுக்கும் தனித்துவமான எண் மற்றும் கலர் இருக்கும். அதாவது சிக்னல் எண் 1050 மற்றும் கிரீன் நிறம் என்றால், லோகோ பைலட் 'சிக்னல் 1050, கிரீன்' என்று சத்தமாக சொல்வார்கள். உதவி லோகோ பைலட் இவற்றை கண்காணித்து உடனே உறுதி செய்ய வேண்டும்.

மனித தவறுகளால் விபத்துகள் தடுப்பதை உறுதி செய்வதற்காக இந்த முறை பின்பற்றப்படுகிறது. இருள் சூழ்ந்த நேரத்தில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் சீறிப்பாயும் போது, இந்த இரண்டு நொடி உரையாடல் பாதுகாப்பாக சிக்னல்களை கடந்து செல்லவும், பேராபத்து எதுவும் நடக்காமல் இருப்பதையும் உறுதி செய்யும்.

ரயில் தண்டவாளங்களை ஒட்டி சில கிலோமீட்டர் இடைவெளியில் சிக்னல் போஸ்டுகள் இருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். பிசியான ரூட்களில் ஒவ்வொரு 500 மீட்டர் முதல் 800 மீட்டருக்குள் சிக்னல்கள் இருக்கும். ஸ்டேஷன் அருகில் இருந்தால் 200 முதல் 500 மீட்டருக்குள் சிக்னல்கள் இருப்பதையும் பார்க்கலாம்.

எங்கே மெதுவாக இயக்க வேண்டும்

இந்த சிக்னல்களை வைத்தே ரயிலை லோகோ பைலட்கள் தொடர்ந்து முன்னோக்கி இயக்குவார்கள். சிக்னல்கள் சிவப்பில் இருந்தால் ரயில் அங்கேயே நிறுத்தப்படும். ரயில்களை லோகோ பைலட்கள் நிலையத்தில் இருந்து எடுக்கும் முன்பாக செல்லும் ரூட்டை பற்றிய முழு தரவுகளையும் கையில் வைத்திருப்பார்கள்.

ரயில்களை எங்கே நிறுத்த வேண்டும், எந்த நேரத்தில் செல்ல வேண்டும், தண்டவாளங்கள் எங்கே வளைந்து செல்கின்றன, எங்கே மெதுவாக இயக்க வேண்டும், எந்த இடத்தில் பராமரிப்பு பணி நடைபெறுகிறது என்பது போன்ற முழு விவரங்களையும் சார்ட்டாக வைத்திருப்பார்கள். இதைக் பார்த்த பிறகே லோகோ பைலட்கள் ரயில்களை பிளாட்பார்மில் இருந்து இயக்குவார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+