கர்நாடகா: காங், ஜேடிஎஸ்-ன் ஒக்கலிகா கவுடா கோட்டையில் பிரம்மாண்ட பேரணி.. மாஸ் காட்டிய பிரதமர் மோடி!
கர்நாடகா மாண்டியாவில் பிரதமர் மோடி பிரம்மாண்ட பேரணி நடத்தினார்.
மாண்டியா: கர்நாடகா சட்டசபை தேர்தல் தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில் மாண்டியா பகுதியில் பிரதமர் மோடி இன்று பிரம்மாண்ட பேரணி நடத்தினார். மேலும் மைசூர்- பெங்களூர் விரைவு சாலை உள்ளிட்டவற்றையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
கர்நாடகா சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்டது. கர்நாடகாவில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகள் இப்போதே தேர்தல் பணிகளில் ஜரூராக களமிறங்கிவிட்டன. தேர்தல் ஆணையமும் கர்நாடகா தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றன.

கர்நாடகாவில் எப்படியாவது பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியாக வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது காங்கிரஸ். அக்கட்சிக்கு கர்நாடகாவில் பெரும்பான்மை ஜாதிகளில் ஒன்றான ஒக்கலிகா கவுடா வாக்கு வங்கி முதன்மையானதாக இருக்கிறது. கடந்த காலங்களில் ஜேடிஎஸ்-க்கு பக்க பலமாக இருந்த ஒக்கலிகா கவுடா வாக்கு வங்கி இம்முறை முழுமையாக காங்கிரஸ் பின்னால் இருக்கிறது. ஒக்கலிகா கவுடா ஜாதியை சேர்ந்த சிவகுமார், அம்மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருப்பதும் இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் ஒக்கலிகா கவுடா வாக்கு வங்கியில் ஓட்டை போட முடியுமா என்பது பாஜகவின் வியூகம்.

இதன் ஒரு பகுதியாக இன்று ஒக்கலிகா கவுடாக்கள் பெரும்பான்மையாக அல்லது கோட்டையாக இருக்கும் மாண்டியாவில் பிரதமர் மோடி பிரம்மாண்ட பேரணியை நடத்தினார். சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு காரில் நின்றபடியே பயணித்தார் பிரதமர் மோடி. வழி எங்கும் பிரதமர் மோடிக்கு பூமழை தூவி உற்சாக வரவேற்பலிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பெங்களூரு - மைசூரு விரைவுச் சாலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார் . பெங்களூரு - நிதாகட்டா - மைசூரு தேசிய நெடுஞ்சாலை என்.ஹெச்-275-ன் ஒரு பகுதியை ஆறு வழிச் சாலையாக மாற்றும் திட்டம் இதில் அடங்கும். 118 கி.மீ தூரத்திலான இந்தத் திட்டம் ரூ.8480 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சாலை பெங்களூரு மற்றும் மைசூருக்கு இடையேயான பயண நேரத்தை 3 மணி நேரத்திலிருந்து 75 நிமிடமாக குறைக்கும். இது அப்பகுதியின் சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்கு ஊக்கமளிக்கும்.

மைசூரு - குஷால் நகர் இடையேயான நான்கு வழி நெடுஞ்சாலைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 92 கிலோமீட்டர் நீளத்தில் மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டம் ரூ.4130 கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது. பெங்களூருடனான குஷால் நகரின் இணைப்பை இத்திட்டம் மேம்படுத்தும் என்பதுடன் பயண நேரத்தை, 5 மணி நேரத்திலிருந்து 2.30 மணி நேரமாக குறைக்கும்.
மாண்டியாவைத் தொடர்ந்து தார்வாடா இந்தியத் தொழில்நுட்பம் நிறுவனத்தை (ஐஐடி) பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த நிறுவனத்திற்கான அடிக்கல், பிரதமர் நரேந்திர மோடியால் 2019 ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நாட்டப்பட்டது. ரூ.850 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த நிறுவனம் தற்போது நான்காண்டு பி.டெக் படிப்பு, ஐந்தாண்டு பி.எஸ் - எம்.எஸ் படிப்பு, எம்.டெக் மற்றும் பி.எச்.டி படிப்புகளை வழங்கும்.
ஹூப்பளி ஸ்ரீ சித்தரூத சுவாமிஜி ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் நீளமான ரயில்வே நடைமேடையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார். இந்த சாதனை கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தால் அண்மையில் அங்கீகரிக்கப்பட்டது. 1507 மீட்டர் நீள நடைமேடை ரூ.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.

ஹொசப்பேட்டை - ஹூப்பளி - தினைகட் ரயில்வே வழித்தடத்தில் மின்மயமாக்கப்பட்ட தடத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பதுடன் மேம்படுத்தப்பட்ட ஹொசப்பேட்டை ரயில் நிலையத்தில் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இது அப்பகுதியில் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தும். ரூ.530 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள மின்மயமாக்கல் பணி தடையற்ற விரைந்த ரயில் போக்குவரத்தை ஏற்படுத்தும். மறுசீரமைக்கப்பட்ட ஹொசப்பேட்டை ரயில் நிலையம் பயணிகளுக்கு நவீன வசதிகளை வழங்கும். ஹம்பி புராதனச் சின்னங்களை நினைவுபடுத்தும் வகையில் இந்த ரயில் நிலையம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
ஹூப்பளி - தார்வாடாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு பொலிவுறு நகரத் திட்டப் பணிகளையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். மொத்தம் ரூ.520 கோடி மதிப்பில் இத்திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. சுகாதாரமான, பாதுகாப்பான வாழ்க்கையை மக்களுக்கு உறுதி செய்வதுடன் எதிர்காலத்துக்கு ஏற்ற வகையில் இந்த நகரத்தில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஜெயதேவ மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார். ரூ.250 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள இந்த மருத்துவமனை அப்பகுதி மக்களுக்கு இதய நோய் சிகிச்சைகளை வழங்கும்.
அப்பகுதியின் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்தும் வகையில் செயல்படுத்தப்படவுள்ள கிராமங்களுக்கான குடிநீர் விநியோகத் திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார். இத்திட்டம் ரூ.1040 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படுகிறது.
துப்பரிஹல்லா வெள்ளச் சேதக் கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார். ரூ.150 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டம், கரைகளில் தடுப்புச் சுவர்கள் கட்டப்பட்டு வெள்ளச் சேதங்களை தடுப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications