For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமைச்சர் வீட்டில் வருமானவரி சோதனை.. தேர்தலுக்கான அரசியல் சதி என சித்தராமையா குற்றச்சாட்டு!

கர்நாடக அமைச்சர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்தியதற்கு அம்மாநில முதல்வர் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடக அமைச்சர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்தியதற்கு அம்மாநில முதல்வர் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கர்நாடக அமைச்சர் சிவக்குமாரின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். டெல்லி மற்றும் பெங்களூருவில் உள்ள வீடுகளில் சோதனை நடைபெற்றது.

Karnataka Chief minister Siddaramaiah condemns for the IT raid in the minister's house

டெல்லியில் உள்ள அவரது வீட்டில் ரூ.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாவும், பெங்களூருவில் உள்ள வீட்டில் ரூ.6 கோடி பணம் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் கர்நாடக அமைச்சரின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டதற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் வீட்டில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டது தேர்தலுக்கான அரசியல் சதி என்றும் முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார். மேலும் வருமானவரித்துறை சோதனையின்போது துணை ராணுவப் படையினரை பயன்படுத்தியது கண்டிக்கத்தக்கது
என்றும் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

அரசியல் ஆதாயத்திற்காக வருமானவரித்துறையை பயன்படுத்துவது கூட்டாட்சி முறைக்கு எதிரானது என்றும் முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டினார். இதுபோன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் சித்தராமையா கூறியுள்ளார்.

English summary
Karnataka Chief minister Siddaramaiah condemns for the IT raid in the minister's house. He also said that they are ready to face such threatens.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X