ரெண்டு பேரு செய்ததெல்லாம் கூட்டு பலாத்காரம் கிடையாதுங்க... கர்நாடக உள்துறை அமைச்சர் சர்ச்சை பேட்டி
பெங்களூர்: இரண்டு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது கூட்டு பாலியல் பலாத்காரம் கிடையாது என்று கர்நாடக உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, அவர் அதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். தேசிய பெண்கள் ஆணைய தலைவர் லலிதா குமாரமங்கலமும், ஜார்ஜ் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் கால்சென்டர் ஊழியராக வேலை பார்க்கும், மத்திய பிரதேசத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண் கடந்த சனிக்கிழமை இரவு ஓடும் வேனில் பலாத்காரம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேரை மடிவாளா போலீசார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் கர்நாடக உள்துறை அமைச்சர் ஜார்ஜ் பேசுகையில், "இரண்டு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது கூட்டு பாலியல் பலாத்காரம் கிடையாது. கூட்டு பாலியல் பலாத்காரம் என்பது நான்கு முதல் ஐந்து பேர் ஈடுபடுவது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம்" என்றார்.
அமைச்சரின் இப்பேச்சுக்கு தேசிய பெண்கள் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக லலிதா குமாரமங்கலம் கூறுகையில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை ஆண்கள் புரிந்துக் கொள்ளவில்லை என்பதற்கு கர்நாடக அமைச்சர் பேச்சு மற்றொரு உதாரணம்.
பொது வாழ்க்கையில் உள்ள தலைவர்கள் குறிப்பாக அரசியல் கட்சியில் உள்ளவர்கள் பேசுவதற்கு முன்னதாக எண்ணிப்பார்க்க வேண்டும். அவருக்கு நாங்கள் நோட்டீஸ் அனுப்புவோம், அவருடைய பதிலை அடுத்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனிடையே, நிலைமை மோசமாவதை அறிந்த ஜார்ஜ், தனது பேச்சுக்கு இன்று வருத்தம் தெரிவித்துள்ளார். "ஒருவர் என்றாலும், பலர் என்றாலும், பலாத்காரம் என்பது பலாத்காரம்தான்" என்று ஜார்ஜ் தெரிவித்தார்.
-
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications