For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடக அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாட்கள் விடுமுறை?

Google Oneindia Tamil News

பெங்களூர்: வாரத்துக்கு ஐந்து நாட்கள் மட்டுமே மாநில அரசு ஊழியர்களுக்கு வேலை நாட்களாக இருக்க வேண்டும் என்று கர்நாடக மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பிரியங் கார்கே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கர்நாடகாவில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக குமாரசாமி பதவி வகிக்கிறார். தொழிலாளர் நலத்துறை அமைச்சராக காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவரான மல்லிகார்ஜூன கார்கே மகன் பிரியங் கார்கே பதவி வகிக்கிறார்.

Karnataka minister wants 2 days leave in a week for government employees

இவர், முதல்வர் குமாரசாமிக்கு, எழுதியுள்ள கடிதத்தில், மாநில அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே பணி நாட்களாக இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுபோன்ற கோரிக்கையை அரசு ஊழியர்கள் பலரும் தன்னிடம் தெரிவித்துள்ளதாகவும், இதனால் பணித்திறமை மேம்படும் என்றும், அந்த கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதுகுறித்து முதல்வர் குமாரசாமி இன்னும் பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

English summary
Karnataka minister for Social Welfare Priyank Kharge says it will boost the work capacity of the state government employees.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X