டிராபிக் விழிப்புணர்வு ஏற்படுத்த புதுப்புது திட்டங்கள்... கலக்கும் பெங்களூர் போலீஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ஹெல்மெட் போடாமல் செல்பவர்கள், சாலை விதியை மீறுபவர்கள் ஆகியோர்களுக்கு டிராபிக் விழிப்புணர்வு ஏற்படுத்த புதுப்புது செயல் திட்டங்களை கொண்டு வருகிறது பெங்களூர் போலீஸ்.

இதன்படி ஆந்திராவில் ஹெல்மெட் போடாமல் ஒரே பைக்கில் பயணித்த ஐந்து பேரை பார்த்து போலீஸ் ஒருவர் கையெடுத்து கும்பிட்டார். இதை நேற்று வீடியோவாக பெங்களூர் போலீசார் டிவிட்டரில் வெளியிடனர். அவரின் செய்கை பலருக்கும் பிடித்ததால் ஒரே நாளில் அவர் வைரல் ஆகியுள்ளார்.

மக்களுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே அவர்களைப் பார்த்து அப்படிக் கும்பிட்டதாக அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். பெங்களூர் போலீஸ் தரப்பு வெளியிட்டுள்ள இந்த டிவிட் பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

டிவிட்டரில் கலக்கும் பெங்களூர் போலீஸ்

மற்ற மாநிலங்களில் இருக்கும் போலீஸ் அதிகாரிகள் போல் இல்லாமல் பெங்களூர் போலீஸ் மிகவும் வித்தியாசமான முறையில் நிறைய செயல்களை செய்து வருகின்றது. மக்களுடன் எளிதாக இணைந்திருக்க விரும்பி இவர்கள் உருவாக்கிய டிவிட்டர் ஹேண்டில் இந்தியா முழுக்க பிரபலம். எந்த பாதுகாப்பு பிரச்சனையாக இருந்தாலும் பெங்களூரில் இருக்கும் மக்கள் அந்த டிவிட்டர் பக்கத்தைத் தான் அணுகுகிறார்கள். இது பல நேரங்களில் மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கின்றது.

ஹெல்மெட் போடாதவர்களை கையெடுத்து கும்பிட்டார்

இந்த நிலையில் ஒரே பைக்கில், ஹெல்மெட் அணியாமல் குடும்பமாக செல்லும் ஐந்து பேரைப் பார்த்து போலீஸ் அதிகாரி ஒருவர் கையெடுத்து கும்பிடுவது போல் வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த போலீஸ் அதிகாரி ஆந்திரத்தை சேர்ந்தவர். இந்த வீடியோ வெளிவந்த சில நேரத்தில் பெருமளவில் வைரல் ஆனது. இந்த வீடியோவில் இருக்கும் போலீஸ் அதிகாரியின் பெயர் சுப குமார் என்பதாகும். இந்த வீடியோவை கர்நாடக போலீஸ் அதிகாரி அபிஷேக் கோயல் வெளியிட்டார். இது நேற்றைய செய்திகளில் பெரிதும் பேசப்பட்டது.

 ஹெல்மெட் அணிவைத்து குறித்து விழ்ப்புணர்வு

ஹெல்மெட் அணிவைத்து குறித்து விழ்ப்புணர்வு

இந்த நிலையில் மக்களிடையே ஹெல்மெட் போடும் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாக அபிஷேக் கோயல் தெரிவித்துள்ளார். மேலும் அவர் ''மக்களுக்கு மற்ற அனைத்தையும் விட பாதுகாப்பும், உயிரும்தான் முக்கியம். எங்களால் இதற்கும் மேல் வேறு எதவும் செய்ய முடியாது. தயவு செய்து அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும்'' என்று கூறினார்.

ஃபைன் போடலாமா அப்படியே விட்டுடலாமா

இந்த நிலையில் பெங்களூரு போலீஸ் அதிகாரி அபிஷேக் கோயல் சாலை விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் போடுவது குறித்தும் ஒரு டிவிட் செய்துள்ளார். அதில் எல்லா நேரங்களிலும் இப்படி மென்மையாக இல்லாமல் , சில சமயங்களில் கண்டிப்பாக அபராதமும் விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Karnataka police working hardly in social media to give awareness on traffic rules.They posted a video later got viral in twitter. They doing best to create awareness.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற