பாலியல் புகாரில் சிக்கியுள்ள கார்த்திக் கவுடா காவல் நிலையத்தில் இன்று மீண்டும் ஆஜர்
பெங்களூர்: சதானந்தகவுடா மகன் கார்த்திக் கவுடா போலீஸ் நிலையத்தில் இன்று மீண்டும் ஆஜராகி விசாரணைக்கு உட்பட்டார்.
மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் கவுடா தன்னை காதலித்து ரகசிய திருமணம் செய்துள்ள நிலையில், தற்போது வேறு ஒரு பெண்ணுடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக கன்னட நடிகை மைத்திரி பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டார்.
இதுதொடர்பாக கார்த்திக் கவுடாவுக்கு எதிராக ஆர்.டி.நகர் போலீஸ் நிலையத்திலும் மைத்திரி புகார் கொடுத்தார். அதன்பேரில், கார்த்திக் கவுடா மீது பலாத்காரம், மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான கார்த்திக் கவுடாவை தேடி வந்தனர்.

இந்நிலையில், முன்ஜாமீன் கேட்டு, பெங்களூர் நகர 63வது செஷன்ஸ் கோர்ட்டில் கார்த்திக் கவுடா தாக்கல் செய்த மனு மீது தீர்ப்பளித்த நீதிபதி, ரூ.2 லட்சம் பிணையத்தொகை, 2 முக்கியஸ்தர்களின் கையெழுத்து ஆகியவற்றை பெற்றுக்கொண்டு கார்த்திக் கவுடாவுக்கு முன்ஜாமீன் வழங்கலாம் என்று தெரிவித்தார். மேலும் ஒவ்வொரு மாதமும் 15 மற்றும் 30ம் தேதிகளில் ஆர்.டி.நகர் காவல் நிலையத்தில் கார்த்திக் ஆஜராக வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது.
முன்ஜாமீன் பெற்ற இரு நாட்கள் கழித்து கார்த்திக் கவுடா முதன்முறையாக காவல் நிலையத்தில் ஆஜரானார். அவருக்கு மருத்து பரிசோதனைகள் நடத்தப்பட்டு, விசாரணைக்கும் உள்ளானார்.
இந்நிலையில் நீதிமன்ற தீர்ப்பு படி 15ம்தேதியான இன்றும் கார்த்திக் கவுடா போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் விசாரணை அதிகாரியும், உதவி கமிஷனருமான ஓம்பிரகாஷ் விசாரணை நடத்தினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications