For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவுக்கான அமெரிக்காவின் இடைக்காலத் தூதராக கேத்லீன் ஸ்டீபன்ஸ் பொறுப்பேற்றார்!

By Mathi
Google Oneindia Tamil News

Kathleen Stephens takes charge as US interim envoy
டெல்லி: இந்தியாவுக்கான அமெரிக்காவின் இடைக்காலத் தூதராக கேத்லீன் ஸ்டீபன்ஸ் இன்று பொறுப்பேற்றார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக இருந்த நான்சி பவல், பணியிலிருந்து ஓய்வுபெற்று கடந்த மாதம் சொந்த நாடு திரும்பினார். இதையடுத்து இடைக்கால தூதராக கேத்லீன் ஸ்டீபன்ஸ் நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து டெல்லியிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் இன்று கேத்லீன் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற ஆர்வத்துடன் இருக்கிறோம். வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட துறைகள் மூலம் இருநாடுகளிலும் வளர்ச்சி ஏற்பட பணியாற்றுவேன்.

ஆப்கனில் அமைதியை ஏற்படுத்தவும், தீவிரவாதத்தை ஒழிக்கவும், இரு நாட்டு மக்களுக்கு இடையேயான நல்லுறவை மேம்படுத்தவும் இந்தியாவுடன் இணைந்து செயல்படுவோம் என்றார்.

English summary
Kathleen Stephens, the new US interim Ambassador, today took charge of the American Embassy here and said she was looking forward to working with India for strengthening and broadening the Indo-US partnership.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X