For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போலாவரம் திட்டம்.. 4 மாநில முதல்வர்கள் கூட்டத்துக்கு கே.சி.ஆர். கோரிக்கை!

By Mathi
Google Oneindia Tamil News

KCR wants CMs' meet on Polavaram
டெல்லி: போலாவரம் அணைக்கட்டு திட்டத்துக்கு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விவாதிக்க 4 மாநில முதல்வர்கள் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் நேற்று டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசினார். அப்போது தெலுங்கானா பகுதியில் அமைய இருக்கும் போலாவரம் அணைக்கட்டு திட்டத்துக்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

பின்னர் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போலாவரம் நீர்ப்பாசன திட்டத்திற்கு பிரதமரிடம் எதிர்ப்பை தெரிவித்தேன். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் ஒடிஷா, சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் ஆந்திரா பழங்குடியின மக்கள் பாதிக்கப்படுவார்கள். இதனால் 4 மாநில முதல்வர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து ஆலோசனை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன் என்றார்.

மேலும் "எதிர்ப்பையும் மீறி போலாவரம் நீர்ப்பாசனத் திட்டம் தொடர்பாக மத்திய அரசு, அவசர சட்டம் கொண்டு வந்தால், அதை கடுமையாக எதிர்ப்போம். எனவே மத்திய அரசு இந்த திட்டத்தில் மாற்று வழிகளை கையாள வேண்டும்' என்றார்.

English summary
Telangana Chief Minister K Chandrasekhar Rao on Sunday demanded a meeting with his counterparts from Andhra Pradesh, Odisha and Chhattisgarh to take the Polavaram irrigation project further.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X