For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கெஜ்ரிவாலை சந்திக்க மறுத்த மோடி: ஆம் ஆத்மியின் நாடகம் என பாஜக சாடல்

By Siva
Google Oneindia Tamil News

அகமதாபாத்: ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மறுத்துவிட்டார்.

குஜராத்தில் மோடி கூறுவது போல் முன்னேற்றம் உள்ளதா என்பதை கண்டறிய அங்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால். தனது சுற்றுப்பயணத்தில் குஜராத்தில் முன்னேற்றத்தை காணவில்லை என்றும், மோடி கூறி வருவது எல்லாம் சுத்தப் பொய் என்றும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Kejriwal stopped from meeting Modi

இந்நிலையில் அவர் மோடியை சந்தித்து 16 கேள்விகளை கேட்க அவரது இல்லத்திற்கு கிளம்பினார். ஆனால் மோடியின் வீடு இருக்கும் காந்திநகருக்குள் அவரை நுழையவிடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். மோடியை சந்திக்க அவர் முன்கூட்டியே அனுமதி பெறவில்லை என்று கூறப்பட்டது.

இதையடுத்து ஆம் ஆத்மி கட்சியின் மனிஷ் சிசோடியா கெஜ்ரிவால் மோடியை சந்திக்க அனுமதி கோரினார். ஆனால் மோடி கெஜ்ரிவாலை சந்திக்க மறுத்துவிட்டார்.

இந்நிலையில் ஒரு அரசை 2 மாதம் கூட நடத்த முடியாத கெஜ்ரிவால் தற்போது விளம்பரத்திற்காக நாடகம் நடத்தி வருகிறார் என்று பாஜக தலைவர் ஜெய் நாராயண் வியாஸ் தெரிவித்துள்ளார்.

English summary
Gujarat CM Narendra Modi has rejected Aam Admi party chief Arvind Kejriwal's request for an appointment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X