முல்லைப்பெரியாறு அணை பலமாக உள்ளது என்ற ஆய்வு முடிவை தட்டிக்கழிக்க முடியாது: பினராயி விஜயன்
டெல்லி: முல்லைப்பெரியாறு அணை பலமாக உள்ளது என்ற ஆய்வு முடிவை தட்டிக்கழிக்க முடியாது என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.
கேரள சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரசிடம் இருந்து ஆட்சியை மீண்டும் கைப்பற்றியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பினராய் விஜயன் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

முதல்வராக பொறுப்பேற்ற பின் பினராயி விஜயன் முதல் முறையாக நேற்று டெல்லி சென்றார். டெல்லியில் உள்ள கேரள அரசு இல்லத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்தித்த அவர், பின்னர் துணை ஜனாதிபதியை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இதேபோல் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியையும் சந்தித்தார்.
இதன்பின்னர், செய்தியாளர்களை சந்தித்த பினராயி விஜயன், முல்லைப் பெரியாறு பிரச்சினை குறித்து பேசினார். அப்போது, முல்லைப்பெரியாறு அணை தேவையான அளவு பலமாக உள்ளது என்ற நிபுணர் குழுவின் ஆய்வு முடிவுகளை தட்டிக்கழிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
"அணை பாதுகாப்பாக உள்ளதா? என்பதுதான் முதல் பிரச்சனை. மக்களின் பாதுகாப்பு கருதி முல்லைப் பெரியாறு பிரச்சினை அணுகப்பட்டது. ஆய்வு முடிகளின் தன்மையை பொருத்தே பிரச்சனையை அணுக முடியம்' என்றும் அவர் கூறினார்.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications