For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாய்களுக்கு இனி கட்டாய லைசென்ஸ், கருத்தடை சிகிச்சை: கேரளா ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!!

By Mathi
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் நாய்களின் அட்டகாசத்தை ஒழித்து கட்ட அம்மாநில உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

கேரளாவில் நாய்கள் அட்டகாசம் உச்சகட்டமைந்துள்ளதாக கூறி சமூக ஆர்வலர் கேரளா உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கை தொடர்ந்தார்.

Kerala dogs will get licence

இந்த வழக்கை விசாரித்த கேரளா உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவுகள்:

  • கேரளாவில் இனி நாய்களுக்கு லைசென்சு பெற்றுதான் வளர்க்கவேண்டும்.
  • வெறிநாய்களை ஒழிக்க நகராட்சி நிர்வாகங்கள் நாய்களை பிடித்து கூண்டில் அடைக்க வேண்டும்.
  • தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்ய வேண்டும்
  • வீடுகளில் நாய் வளர்ப்போர் வாரம் ஒருமுறை அந்த நாய்களை கால்நடை மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டும்.
  • இந்த உத்தரவுகளை மாநில உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே கேரளா அரசும் வீட்டில் வளர்க்கப்படும் நாய் உட்பட அனைத்து பிராணிகளுக்கு அடையாள அட்டை வழங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

English summary
The Kerala High Court ordered that local bodies should take steps for effective control of stray dogs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X